இந்தியா-ஆப்கானிஸ்தான் டெஸ்ட் இன்று தொடக்கம்

சற்றுமுன் விளையாட்டு

18 June13 india afganistan - 2026இந்தியா-ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி பெங்களூருவில் இன்று தொடங்குகிறது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்டில் விளையாட சமீபத்தில் ஐ.சி.சி. அங்கீகாரம் அளித்த நிலையில் அந்த அணி முதல் முறையாக இந்தியா அணியுடன் மோத உள்ளது.

கேப்டன் விராட்கோலி இங்கிலாந்து தொடருக்காக இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். இதனால் ரகானே கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இந்திய அணியில் துவக்க வீரர்களாக தவானும், முரளி விஜய்யும் விளையாட உள்ளனர். இந்த டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.