
இந்திய இங்கிலாந்தி அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி – இரண்டாம் நாள் ஆட்டம்
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –
ஆண்டர்சன் எடுத்த ஐந்து விக்கெட்டுகள், இங்கிலாந்து பந்து வீச்சாளர்களுக்கு உதவிய ஒரு நாளில் இந்தியா 364 (ராகுல் 129, ஆண்டர்சன் 5-62), இங்கிலாந்து 119/3 எடுத்து இந்திய அணியைவிட 246 ரன்கள் பின்தங்கியிருக்கிறது.
இரு தரப்பினருக்கும் இது ஒரு நல்ல நாளாக இருந்தது. இங்கிலாந்து இந்திய அணியை அதிக ரன்கள் எடுக்க அனுமதிக்கவில்லை; இந்திய பந்துவீச்சாளர்கள் ஆங்கில பேட்ஸ்மேன்களை சுதந்திரமாக ஸ்கோர் செய்ய அனுமதிக்கவில்லை.
பந்துவீச்சில் இங்கிலாந்து அணிக்கு சிறப்பாக பந்து வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன், 70 ஆண்டுகளில் டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய மிக வயதான மனிதர் ஆனார். மீதமுள்ள பவுலர்கள் அவருக்கு அன்றைய தினம் மிகச் சிறப்பாக உதவினர். மேலும் அவர்கள் நேற்று 276/3 என்ற ஸ்கோரில் இருந்த இந்திய அணியை 88 ரன்கள் மட்டுமே சேர்க்க அனுமதித்தனர்.
ஆட்டநேர முடிவில் இங்கிலாந்தின் ஜோ ரூட் ஆடிகொண்டிருக்கிறார். அந்த அணி 246 ரன்கள் பின்தங்கிய நிலையில் உல்லது. முகமது சிராஜிண்டும் ஆதிக்கம் பெறும் என்று அச்சுறுத்தல் ஏற்பட்டபோது, ரோரி பர்ன்ஸுடன் சேர்ந்து ரூட் நன்றாக விளையாடினார்.
இரண்டாம் நாள் ஆட்டம் இங்கிலாந்திற்கு இதைவிடச் சிறப்பாகத் தொடங்கியிருக்க முடியாது. ஓலி ராபின்சனின் இரண்டாவது பந்தை ஓவர்நைட் செஞ்சுரியன் கே.எல். ராகுல் தவறாக அடித்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஆண்டர்சன் அஜிங்க்யா ரஹானேயை கேட்ச் கொடுத்து அவுட் ஆக வைத்தார்.
ரஹானே அவரிடம் எதிர்பார்த்ததைச் செய்யவில்லை, ரிஷப் பந்த் எந்தப் பொறுப்புமின்றி ஒரு பள்ளி மாணவன் போல ஆடுகிறார். அவர் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே இவந்த பந்தைக் கூட அடிக்க முயன்றார். டெஸ்ட் கிரிக்கெட் என்பது எப்போதும் காத்திருந்து விளையாடும் ஒரு ஆட்டம்.
ஒரு அணி மேட்சின் முதல் இன்னிங்சில் விளையாடும் போது அதிக நேரம் விக்கெட்டில் இருக்க முயற்சித்திருக்க வேண்டும். பந்த் அதைச் செய்யவில்லை.
இந்த நாள் பந்துவீச்சாளர்களுக்கு சொந்தமானது என்று சொன்னால் அது மிகையாகாது. இரண்டாவது நாள் நிகழ்ச்சியில் இரு அணிகளும் ஏறத்தாழ 200 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர். இன்றும் மோசமான வானிலை இருக்கும் என எதிர்பார்க்கப்படவில்லை.
எனவே இன்றைய ஆட்டம் பந்துவீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களுக்கு இடையே ஒரு கடினமான சோதனையாக இருக்கும்.