images 48 2 - 2026

இந்தியா முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு

சற்றுமுன்
images 48 2 - 2026
#image_titl

இந்தியா முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி உள்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள்.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ். படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவ படிப்பு ஆகிய படிப்புகளின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

1276753 2 - 2026
#image_title

மேலும் ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்.சி. நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5.20 மணி வரை நேரடியாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

ALSO READ:  ஆடிப்பூர உத்ஸவம்; ஆண்டாள் மடியில் ரங்கமன்னார் சயனக் கோலக் காட்சி!

நீட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப்பதிவு கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் நாடு முழுவதும் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இந்த நிலையில் அறிவிக்கப்பட்டபடி நீட் தேர்வு இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. நாடு முழுவதும் 11 லட்சத்து 84 ஆயிரத்து 502 மாணவிகளும், 9 லட்சத்து 2 ஆயிரத்து 930 மாணவர்களும், 13 திருநங்கைகளும் என மொத்தம் 20 லட்சத்து 87 ஆயிரத்து 445 பேர் நீட் தேர்வை எழுதினார்கள். தமிழகத்தில் 1 லட்சத்து 47 ஆயிரத்து 581 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் அரசுப் பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் ஆவர். தமிழகத்தை பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி உள்பட 24 மாவட்டங்களில் நீட் தேர்வு நடைபெற்றது.

சென்னையில் மட்டும் 28 மையங்களில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதினார்கள். தமிழ், ஆங்கிலம், இந்தி, குஜராத்தி உள்பட 13 மொழிகளில் மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத வந்த மாணவர்கள் காலை 11.30 மணியில் இருந்தே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். 1.30 மணி வரை மட்டுமே அவர்கள் தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கூட அனுமதி சீட்டு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை சரிபார்த்து மாணவர்கள் உள்ளே அனுப்பப்பட்டனர்.

ALSO READ:  முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

தேர்வு எழுதியவர்கள் வெளிப்படையான தண்ணீர் பாட் டில் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. தேர்வு அறையில் செல் போன், கடிகாரம் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல அனுமதிக் கப்படவில்லை. முழுக்கை சட்டை, பெல்ட், கம்மல், மூக்குத்தி அணியவும் தடை விதிக்கப்பட்டது. தலைமுடியில் ஜடை பின்னல் போட அனுமதிக்கப்படவில்லை.

மேலும் அனுமதிச்சீட்டில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்து தேர்வு முடிந்ததும் அறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த மாணவரின் விடைத்தாள் திருத்தப்படாது. தவறான விடைக்கு நெகட்டிவ் மதிப்பெண் இருப்பதால் தேர்வின்போது கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மணிப்பூரில் பழங்குடியினர் மற்றும் மைதேயி சமூகத்தினர் இடையே நடந்த கலவரத்தில் ஏராளமானோர் பலியானார்கள். பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு உள்ள நிலையில் தலைநகர் சிம்பாவில் தற்போது இயல்புநிலை திரும்பி வருகிறது. மணிப்பூரில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை காரணமாக அங்கு மட்டும் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. அங்கு நீட் தேர்வு நடைபெறும் புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.