ரிமூவ் சைனா ஆப் செயலியை ரிமூவ் செய்தது கூகுள் ப்ளே ஸ்டோர்!

இந்தியா சற்றுமுன் தொழில்நுட்பம் லைஃப் ஸ்டைல்
remove china apps feat
remove china apps feat

ஒரே மாதத்தில் 50 லட்சத்துக்கும் அதிகமான பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்ட ‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவியது என்பதாலும் தற்போது இந்திய எல்லையில் சீனா, தனது படைகளைக் குவித்துள்ளதாலும், மேலும் சில காரணங்களாலும் சீனப் பொருள்களை வாங்க மாட்டோம் என நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையடுத்து மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கும் பொருட்டு ஜெய்ப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் ஒ

‘ரிமூவ் சீனா ஆப்ஸ்’ (Remove China Apps) என்ற செயலியை அறிமுகப்படுத்தியது. அடித்த சில நாளிலேயே இதனை ஆயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்தனர். தொடர்ந்து லட்சக்கணக்கானோர் இதனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கினர்

remove china app
remove china app

தற்போது 50 லட்சத்துக்கும் அதிகமானோர் இதனை பதிவிறக்கம் செய்துள்ள நிலையில், ‘ரிமூவ் சீனா ஆப்’ என்ற செயலி கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

சீன செயலியான ‘டிக் டாக்’ செயலிக்கு எதிர்ப்பு கிளம்பி வருவதால், அதற்கு மாற்றாக மித்ரன் (Mitron) என்ற செயலியை பயனர்கள் பதிவிறக்கம் செய்து அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த செயலியும் தற்போது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இந்த இரு செயலிகளையும் நீக்கியதற்கான காரணம் குறித்து கூகுள் நிறுவனத் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

கூகுளின் இத்தகைய நடவடிக்கைகளால் கூகுள் நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதாக சமூக வலைத்தளங்களில் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் இந்த மொபைல் செயலி மூலமாக லட்சக்கணக்கானோர் தங்கள் மொபைலில் உள்ள சீன செயலிகளை நீக்கியதன் மூலமாக, சீன வர்த்தகத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

டிக்டொக் செயிலிக்கு மாற்றாக அடையாளம் கானப்பட்ட மிட்ரான் செயலியின் நிரல் டிக்டாக் போலவே அமைந்திருப்பதுடன் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாக பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டது.

சீன செயலிகளை நீக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ரிமூவ் சீனா ஆப்ஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்ட இரு வாரங்களுக்குள் 50 லட்சத்திற்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கடந்து, 4.9 நட்சத்திர ரேட்டிங்ஙை பெற்றிருந்தது.

Remove China Apps செயலியை கூகுள் நீக்கியுள்ள நிலையில் இதற்கான காரணத்தை குறிப்பிட்டுள்ளது. அதாவது எந்தவொரு மூன்றாம் தர ஆப் அல்லது செயலியை அன் இன்ஸ்டால் செய்வதற்கு ஊக்குவிக்கக் கூடாது என்ற கூகுளின் விதிகளுக்கு உட்பட்டு இந்த செயலியை நீக்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.