முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை! தனியார் மருத்துவ மனைகளிலும்!

சற்றுமுன் சென்னை பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
tamilnadu corona
tamilnadu corona

முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இனி சிகிச்சை பெறலாம் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

  • முதல்வரின் காப்பீடு திட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை:
  • அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் இனி சிகிச்சை பெறலாம்.
  • அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிர்ணயம்.
  • மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.
  • அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு நாள்ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.15,000.
  • 25 சதவீத படுக்கைகளை காப்பீடு திட்ட பயனாளிகளுக்கு ஒதுக்க வேண்டும்.

இது குறித்த விவரம்…

அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.5,000 நிர்ணயம்.

மருத்துவ காப்பீடு திட்ட பயனாளிகள் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் நோயாளிக்கு நாள்ஒன்றுக்கு அதிகபட்சம் ரூ.15,000.

அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளின் உள்ள மொத்த படுக்கை எண்ணிக்கையில் குறைந்தபட்சம் 25 சதவீதம் முதல்வரின் காப்பீடு திட்டத்தின் கீழ் சிகிச்சைக்கு வரும் கொரோனா நோயாளிகளுக்கு பிரத்யேகமாக ஒதுக்க வேண்டும்

நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகை செலுத்த கோரும் மருத்துவமனைகளின் மீது முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

மேலும் விவரங்கள் மற்றும் புகாருக்கு 1800 425 3993 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும் மருத்துவ பேரிடர் காலத்தில் அரசு மருத்துவமனைகளும், தனியார் மருத்துவமனைகளும் இணைந்து செயல்படும்.

இந்த புதிய அறிவிப்பு தமிழகத்தில், முதல்வரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் ஏற்கெனவே பதிவு செய்து பயன் பெற தகுதியான குடும்பங்களுக்கு பொருந்தும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.