ஆரோக்கிய சமையல்: வரகு இனிப்பு பொங்கல்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
varaku inippu ponkal - 2026

வரகு இனிப்புப் பொங்கல்

தேவையான பொருட்கள்:
வரகு, வெல்லம் – தலா 200 கிராம் முந்திரிப்பருப்பு, திராட்சை -தேவைக்கேற்ப
நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன் ஏலக்காய்த்தூள் – சிறிதளவு.

செய்முறை:
முதலில் வெல்லத்தைத் துருவிக்கொள்ளவும். வரகை இருபது நிமிடங்கள் ஊறவைத்துக் களையவும். ஒரு பங்கு வரகுக்கு இரண்டரை பங்கு என்கிற அளவில் தண்ணீர்விட்டு குக்கரில் மூன்று விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். தேங்காய்த் துருவல், முந்திரிப்பருப்பு, திராட்சையைச் சிறிதளவு நெய்யில் வறுத்து எடுத்துக்கொள்ளவும். வேகவைத்த வரகுடன் துருவிய வெல்லம் சேர்த்து, அடுப்பைக் குறைந்த தீயில் வைத்துக் கிளறவும். வெல்லம் முழுவதுமாகக் கரைந்ததும் மறுபடியும் ஐந்து நிமிடங்களுக்குக் கலவையை அடிபிடிக்காமல் கிளறவும். பின்னர் வறுத்த முந்திரிப்பருப்பு, திராட்சை, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறவும். கடைசியாக ஏலக்காய்த்தூளைச் சேர்த்து, மீதமுள்ள நெய்விட்டுக் கிளறி இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.