
மனைவியின் கைகளை வெட்டிய கணவன்; சந்தேகப் பிராணியான கணவன் மனைவியின் கைகளை வெட்டினான்.
கடப்பா மாவட்டத்தில் நிகழ்ந்த கொடுமை இது. கணவன் தாக்கியதால் பத்மாவதியின் வலது கை முழுவதும் துண்டிக்கப்பட்டது. இடது கையும் முக்கால்வாசி துண்டிக்கப்பட்டுள்ளது. அருகில் இருந்தோர் உடனடியாக அவரை மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர்.
மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் கோபத்தால் அறிவிழந்தான். மனைவி பிறந்த வீட்டுக்குச் செல்வதை விரும்பாத அவன் மனைவியை கோபத்தால் தாக்கினான்.
கடப்பா மாவட்டம் ‘ரயில்வே கோடூரில்’ இந்த கொடூரம் நிகழ்ந்தது. ‘விபிஆர் கண்டிரிக’ என்ற கிராமத்தைச் சேர்ந்த சிவய்யாவும் பத்மாவதியும் தம்பதிகள். திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. இருவருமே கூலி வேலை செய்பவர்கள்.
ஆனால் சில நாட்களாக சிவய்யா மனைவியின் நடத்தையில் சந்தேகத்தை வளர்த்துக் கொண்டுள்ளான். இது தொடர்பாக இருவரிடையே பலமுறை சண்டை நடந்துள்ளது. அதனால் பிறந்த வீட்டுக்குச் சென்ற மனைவி திரும்பி வர விரும்பவில்லை. ஆனால் குடும்ப பெரியவர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மனைவி திரும்பி வந்த பின்பும் அவன் சந்தேகம் தீர்ந்த பாடில்லை. செவ்வாய் அன்று இரவு கூட கணவன் மனைவி இடையே வாக்குவாதம் வலுத்தது. அதை தாங்க இயலாமல் பத்மாவதி பிறந்த வீட்டுக்குச் செல்வதற்கு வீட்டை விட்டு கிளம்பினாள்.
அதனால் கோபமடைந்த சிவய்யா கத்தியால் மனைவியை தாக்கினான். கோபத்தால் மதியிழந்து மனைவியின் இரு கைகளையும் வெட்டினான். இதனால் அந்தப் பெண்ணின் வலது கை துண்டிக்கப்பட்டது. இடதுகை ஊசலாடுகிறது.
அருகில் இருந்தோர் அந்தப் பெண்ணை மருத்துவமனையில் சேர்த்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



