
அடுத்த மூன்று நாட்களுக்கு ஆந்திரா அவதார தின உற்சவங்கள் களைகட்டுகின்றன.
நவம்பர் 1 முதல் 3 வரை ஆந்திர மாநிலம் தோன்றிய நாளை ஆந்திரப் பிரதேச அரசாங்கம் விமரிசையாக கொண்டாட உள்ளது. அதிகாரிகள் விஜயவாடா இந்திரா காந்தி முனிசிபல் மைதானத்தில் ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.
இந்த திருவிழாவில் முதல்நாள் சிறப்பு விருந்தினர்களாக மாநில கவர்னரும் முதல்வரும் பங்கு பெறுவார்கள். ‘அமரஜீவி’ பொட்டி ஸ்ரீராமுலுவுக்கு சிறப்பு அஞ்சலி செலுத்துவார்கள்.
மூன்று நாட்களும் தொடர்ந்து கலாச்சாரம், சாம்பிரதாயம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.
சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு சன்மானம் செய்ய உள்ளார்கள். குச்சிபுடி நிருத்தியம், சுரபி நாடகங்களோடு கூட இருபத்தொரு கைத்தறி , கைவினைப் பொருட்களின் ஸ்டால்கள் ஏற்பாடு செய்துள்ளார்கள்.
மாநிலத்தின் பல்வேறு ருசிகளை ஒரே இடத்தில் கொண்டு சேர்க்கும் விதமாக 25 உணவு ஸ்டால்களும் இடம் பெறுகின்றன.



