December 6, 2025, 1:03 AM
26 C
Chennai

காந்தி கொலையும் பின்னணியும் – பகுதி 118

savarkar Godse - 2025

டாக்ஸி அவர்களை இறக்கி விட்ட பிறகு,ரீகல் சினிமா அரங்கின் முன்புறமாக இருந்த திறந்தவெளி வழியாக நடந்து சில மரங்களின் கீழ் வந்து நின்றனர் ஆப்தே, நாதுராம், கார்கரே மற்றும் கோபால் கோட்ஸே.

ஏற்பட்ட தோல்வியின் காரணமாக அவர்களின் மனம் மரத்து போய் விட்டது.

உடனடியாகச் செய்ய வேண்டியது என்ன என்பது பற்றி யோசிக்கலாயினர்.

மதன்லால் பஹ்வாவை அப்படியே விட்டுச்செல்ல கார்கரே தயாராக இல்லை. இன்னொரு நாள் டெல்லியில் தங்கி அவருக்கு எவ்வகையிலாவது உதவமுடியுமா என்று முயன்று பார்க்க எண்ணினார்.

அதன் பிற்கு பம்பாய் சென்று,அங்கு சில காலம் அமைதியாக இருக்கலாம் என்றும் தீர்மானித்தார்.

கோபால் கோட்ஸே பூனாவிற்கு திரும்பி,அங்கு தன் அலுவலகப் பணியை தொடர எண்ணினார்.அடுத்த நாள் காலையில் புறப்படவிருந்த பஞ்சாப் மெயிலில் அவர் பயணிக்கத் தீர்மானித்தார்.

ஆப்தேயும் நாதுராமும் டெல்லியை விட்டு அன்றிரவே புறப்பட்டு பம்பாய் அல்லாத வேறு ஒரு இடத்திற்கு போவதென தீர்மானித்தனர்.

பரஸ்பரம் ஒவ்வொருவரும்,தங்களுக்குத் தாங்களே நம்பிக்கையூட்டிக் கொள்ளும் விதமாக கைகளை குலுக்கிக்கொண்டு அங்கிருந்து பிரிந்தனர்.

ரிவால்வர்கள் இருந்த அந்த மூட்டை கோபால் கோட்ஸேயிடம்தான் இருந்தது.அதை அவர் தன்னுடன் கொண்டுசென்றார்.

அவர் அப்படி செய்ததற்கு வெகு விரைவிலேயே வருந்த வேண்டிவந்தது.

ஆப்தேயும் நாதுராமும் மெரினா ஹோட்டலுக்கு நடந்தே சென்றனர்.லாண்டரியில் தாங்கள் சலவைக்கு போட்டிருந்த துணிகளைப் பற்றி கேட்க வேண்டாம் என்று தீர்மானித்து அப்படியே விட்டுவிட்டனர்.

கார்கரேயும் கோபால் கோட்ஸேயும் ஒரு காஃபி கடையில் சில நிமிடங்கள் உட்கார்ந்து விட்டு ஒரு ‘ டோங்கா ‘ வில் ஹிந்து மஹா சபா பவனுக்குச் சென்றனர்.

அங்கு ஏற்கெனவே,திகம்பர் பாட்கே வந்து தன்னுடைய உடமைகளை எடுத்துக் கொண்டு போய் விட்டிருந்தார்.

அவர்களும் தங்கள் உடமைகளை எடுத்துக் கொண்டு பழைய டெல்லியில்,’ ரயில் நிலையம் அருகேயிருந்த FRONTIER HINDU HOTEL ‘ எனும் ஒரு மலிவு ஹோட்டலில் ஒரு அறையை ஒரு நாள் தங்குவதற்கு வாடகைக்கு எடுத்துக் கொண்டனர்.

ஹோட்டல் ரிஜிஸ்டரில்,கோபால் கோட்ஸே தன் பெயரை,’ ராஜகோபாலன் ‘ என்றும்,கார்கரே தன் பெயரை ‘ ஜி.எம்.ஜோஷி ‘ என்றும் பதிவிட்டனர்.

பிர்லா ஹவுஸிற்கு வெளியே வந்தவுடன்,திகம்பர் பாட்கே ஒரு ‘ டோங்கா ‘ வை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு ஷங்கர் கிஷ்டய்யாவுடன்,ஹிந்து மஹா சபா பவனிற்கு வந்தார்.தங்கள் ‘ லக்கேஜ் ‘ இருந்த கார்கரேயின் அறைக்கு அவர்கள் சென்றனர்.

தன்னுடைய படுக்கையை கட்டும் பணியில் ஈடுபடத் தொடங்கிய திகம்பர் பாட்கே,

தங்கள் வசமிருந்த இரண்டு துணி பைகளிலிருந்த வெடிகுண்டுகளையும்,வெடிப்பொருட்களையும் எடுத்துக்கொண்டு,

ஹிந்து மஹா சபா பவனின் பின்புறமிருந்த காட்டுப்பகுதியில் எங்காவது பள்ளம் தோண்டி அவற்றை புதைத்து விட்டு வரும்படியாக ஷங்கர் கிஷ்டய்யாவிற்கு உத்தரவிட்டார்.

ஷங்கர் கிஷ்டய்யா சென்றபிறகு,ஒரு டாக்ஸியில் பவனுக்கு வந்த ஆப்தேயும்,நாதுராமும்,திகம்பர் பாட்கே ஏன் அப்படி தன்னுடைய பங்கை செய்யாமல் ஓடினார் என்று கேட்டனர்.

அவர்களிடம் கேவலமாக பேசிய பாட்கே அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி ஏசினார்.

அந்த சமயத்தில் வேறெதுவும் செய்ய முடியாததால் அவர்களும் அங்கிருந்து வெளியேறினார்கள்.

ஷங்கர் கிஷ்டய்யா திரும்பியவுடன் அவருடன் திகம்பர் பாட்கே ஒரு ‘ டோங்கா ‘ வில் புது டெல்லி ரயில் நிலையத்திற்குச் சென்றார்.

அங்கு போலீஸ் நடமாட்டம் அதிகமாக இருக்கவே,அங்கிருந்து பழைய டெல்லி ரயில் நிலையத்திற்கு அவர்கள் சென்றனர்.

அங்கு போலீஸ் நடமாட்டம் அதிகமாக இல்லை.

அடுத்த அரை மணி நேரத்தில் பம்பாயிற்கு புறப்பட ஒரு ரெயிலும் தயாராக இருந்தது.

கும்பல் அதிகமாக இருந்த ஒரு கம்பார்ட்மெண்டில் ஏறிய அவர்கள் இரண்டு நாட்களுக்கு பிறகு பூனா போய் சேர்ந்தனர்.

( தொடரும்

காந்திகொலையும்பின்னணியும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories