October 25, 2021, 7:50 pm
More

  ARTICLE - SECTIONS

  நாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத் துறை ஆலயங்கள் விடுவிக்கப்பட வேண்டும்!

  ஏன் இதே அளவுகோல் மற்ற மதங்களின் கூட்டங்களுக்கோ, மத தலங்களுக்கோ இல்லை! இந்த அரசின் விசுவாசம் பல்லிளிக்கிறதே!

  hrnce office e1561694728558

  அனைத்து சாதியினரும் அர்ச்சகர்:
  திமுக.,வும் அமைச்சர்களும் அவிழ்த்து விடும் பொய்கள்!


  அனைத்து சாதியினரும் அர்ச்சகர் என்பதற்கு எதிரிகள் போல் சித்திரித்து, பார்ப்பனர்கள் எதிர்க்கிறார்கள் என்று சாதி ரீதியாகப் பிளவுபடுத்தி, மற்ற சாதியினரைத் தூண்டிவிட்டு… ஆளும் அரசே சமூகத்தில் பதற்ற நிலையை உண்டாக்கி விடும் மிகக் கேவலம் இந்த திமுக., விடியல் ஆட்சியில் அரங்கேறியிருக்கிறது.

  நாங்கள் போட்ட பிச்சையில் ஆட்சிக்கு வந்தார்கள், அதுவும் ஓட்டுப் பிச்சை எடுத்து ஆட்சிக்கு வந்தவர்கள் என்று சிறுபான்மையினராகக் கருதப் படும் வாக்குப் பெரும்பான்மை கிறிஸ்துவ இஸ்லாமியர்களால் வர்ணிக்கப் பட்ட திமுக., விடியல் ஆட்சி, சிறுபான்மையினரான கோயில் அர்ச்சகர், பட்டாச்சார்கள், சிவாசார்யர்களுக்கு எதிராகவும், சிறுபான்மை சமூகத்தவரான பார்ப்பனர்களுக்கு எதிராகவும் பன்னெடுங்காலமாகவே திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் வேலை செய்து வருவது இன்று வெளிப்பட்டிருக்கிறது.

  ஒரு சமூகத்துக்கு எதிராகவும், ஒரு இன மத மக்களின் நம்பிக்கைகளைக் குலைத்து அவர்களுக்கு எதிராகவும் வேலை செய்யும் தமிழக அரசு, அனைவரையும் சமமாக பாவிப்போம் என்று இந்திய அரசியல் சாசனப்படி உறுதிமொழி ஏற்றதற்கு விரோதமாக செயல்படுவதால், இந்த விடியல் அரசு, ஆட்சியில் தொடர்வதற்கு அருகதை அற்றதே!


  ஏற்கனவே கோவில் அர்ச்சகர்களுக்கு பெண் கொடுப்பதில்லை! அர்ச்சகர் குடும்பங்கள் பெரும்பாலும் வாரிசுகள் இன்றி அல்லது திருமணம் ஆகாத பிரம்மச்சாரிகள் என்றே உள்ளன!

  ஆகம விதியின்படி பார்த்தால்… திருமணமாகி குடும்பஸ்தர் ஆக இருக்கும் அர்ச்சகர்களே பிரமோத்ஸவம் உள்ளிட்டவற்றில் காப்பு கட்டி பூஜை செய்யும் யோக்கியதை பெறுகிறார்கள். அதாவது அர்ச்சகர், காப்பு கட்டிக்கொண்டு, பத்து நாள் பிரம்மோத்ஸவம் நடைபெறும் கோவில்களில், குடமுழுக்கு ஆகட்டும் முக்கியமான காப்புக் கட்டி செய்யப்படும் பூஜைகள் ஆகட்டும் எல்லாம் கிரகஸ்தர்களாக இருக்கும் வழி வழி வந்த சிவாசார்யர்கள், அர்ச்சகர்கள் மட்டுமே செய்ய முடியும்! (இரு மனைவி இருப்பவர் காப்பு கட்டி பிரம்மோத்ஸவம் நடத்த இயலாது)

  இன்னும் நிறைய கட்டுப்பாடுகள் சடங்குகள் கோயில் அர்ச்சகருக்கு உள்ளன!

  adipoora-kodiyetram

  ஆகம முறைப்படி இல்லாத, மற்றும் கொடிமரம் இல்லாத நவீன கோவில்கள், விநாயகர், முருகன், அம்பாள் உள்ளிட்ட சுற்றுவட்டார சசந்திகள் இவற்றில் அடுத்து பூஜை செய்வதற்கு, சிவாசாரியார்கள் அல்லது அர்ச்சகர்கள் தேடுவது இப்போதே சிரமமாக உள்ளது. அடுத்த தலைமுறைக்கு எனில் மிகவும் கடினம். கிராமங்களில் ஒரே அர்ச்சகர் பல்வேறு சந்நிதிகளில் போய் வெறுமனே ஒரு வேளை மணி அடித்து நிவேதனம் செய்து விட்டு திரும்புகின்ற அவல நிலை உள்ளது!

  இத்தகைய சூழலில் ஹிந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கையும், கோயில் பூஜை செய்வதில் பெரு விருப்பமும் உள்ளவர்களை தயார் செய்ய வேண்டிய பொறுப்பு, ஆதீனங்கள், சைவ மடங்கள், சங்கர மடங்கள், ஜீயர் மடங்களுக்கு உண்டு.

  எவராக இருந்தாலும் அவர்களுக்கு நன்கு பயிற்சி கொடுத்து தமிழ் திருமறைகள், திருமுறைகள், குறைந்த பட்ச மந்திரங்கள் உள்ளிட்டவற்றில் தேர்ச்சி பெறச் செய்து மேற்படி சந்நிதிகளில் பயன்படுத்தலாம்! தவறில்லை!

  சிவாசாரியர், அர்ச்சகர் இனத்தை அந்த இனமே பெருகவிடாமல் குறுக்கிக் கொண்டு… அழித்து விட்டோம் அல்லது காலம் தானாகவே அழித்துக் கொண்டிருக்கிறது!

  வருங்காலத்தில் தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஆலயங்களில் பூஜை செய்வதற்கு பிராமணர்களேகூட இல்லாத நிலை ஏற்படக்கூடும்! பிராமண மக்கள் தொகை வெகுவாகக் குறைந்து கொண்டே வருகிறது! பிராமணர்கள் தொகுப்பு வேறாகவும், கோயில் கைங்கர்யம் செய்யும் சிவாச்சாரிய, அர்ச்சகர்கள் தொகுப்பு வேறாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

  sankarankoil kodiyetram
  sankarankoil kodiyetram

  அர்ச்சகர் சிவாசாரியர் இல்லாத நிலையில், வேதம் கற்ற பிராமணர்களை அதற்கு தயார் செய்யலாம்! அவர்கள் காயத்ரீ மந்திரம் ஜபித்து மந்திர பலம் கிடைக்கப் பெற்று அதன்மூலம் பூஜகருக்கான ஒளியைப் பெற்றுக் கொள்ளக் கூடும்!

  ஆனால்…. ராஜராஜ சோழன் உள்ளிட்ட சோழ மன்னர்கள், பாண்டியர்கள், பல்லவர்கள், நாயக்கர்கள் உள்ளிட்ட மன்னர்கள் அந்த அந்தக் காலங்களில் கட்டிய ஆலயங்கள் எல்லாம் பழைமைப் பொலிவை இன்றும் இழக்காமல் ஒளி பொருந்தியதாக இன்றும் நிமிர்ந்து நிற்கின்றன என்றால் அதற்கு அதன் ஆகம பூஜை முறைகளே காரணம்.. அவர்கள் ஏற்படுத்தி வைத்த நிவந்தங்கள், ஆசாரங்கள், நியமங்கள் குலையாமல் காப்பது அறநிலையத் துறையின் தலையாய கடமை! இல்லாவிட்டால் ஆட்சியாளர்கள் நாசம் அடைவது உறுதி!

  மன்னர்கள் காலத்து கோயில்கள் எல்லாம் பெரும்பாலும் போர்களின் பின்னும், மக்களின் மன அமைதிக்காகவும் கட்டப்பட்டவை! நாடு பிடித்தல்களின் பின்னே வெற்றி பெறும் மன்னன், தனது மற்றும் வெற்றி பெற்ற நாட்டு மக்களின் தெய்வமாகத் திகழ்ந்த பெருமான்களுக்கு கோயில் எடுப்பித்து, போரினால் விளைந்த மனக் கொந்தளிப்புகளை மக்களிடம் இருந்து அகற்றி, அவர்களை சமாதானப் படுத்தி, கோயில்களை நிறுவி, அங்கே அவர்களை வரச் செய்து, கலை, கலாசாரப் பரவல்களில் மனத்தை ஈடுபடச் செய்தார்கள்.

  சில மன்னர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற ஆலயங்களை எடுப்பித்து கட்டினார்கள். ஆலயங்கள் சில சாப விமோசனத்திற்காக கட்டப்பட்டவை!

  வாரிசு இல்லாமல் போகிறவர்கள், தங்கள் குலம் நாசம் அடைவதைக் கண்ணால் பார்த்தவர்கள்.. தங்களுக்குப் பின் தங்கள் சொத்துகளை பராமரிக்க வழியில்லாதவர்கள், அவற்றை கோயிலுக்கு எழுதி வைத்தார்கள்! அதுதான் குலநாசம் பெற்றதால் ஆன சிவன் சொத்து என்று ஆகி, பின்னாளில் அதுவே சிவன் சொத்து குல நாசம் என்று ஆனது! இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உள்ளது!

  சிவன் சொத்தை அபகரிக்க நினைப்பவன் குலத்தை நாசம் அடையச் செய்பவன் ஆவான்! அவன் குலம் என்றும் தழைக்காது. அவனுக்கும் போகும் வழியில் மகாபாபமே ஒட்டிக் கொள்ளும். அதுபோல், ஒழுங்காக பூஜை செய்யாவிட்டாலும் அந்த அர்ச்சகர் அல்லது சிவாசாரியர் குடும்பமும் கூட நாசத்தை அடையும்!

  கோயிலுக்கு பக்தர்கள் அளிக்கும் எண்ணெய், நெய், பதார்த்தங்கள், இன்னும் சில பொருட்களை பெருமானுக்கே முழுதும் சமர்ப்பிக்காமல் அரைகுறையாக செய்துவிட்டு வீட்டுக்கு எடுத்து வருபவன் குடும்பமும் உருப்படாது. சிதைந்து போகும்!

  hrnce appointment
  hrnce appointment

  இன்றைய நாட்களில் திராவிட இயக்கங்களின் ஒரே பார்வை பிராமண இனத்து பெண்களைக் குறிவைத்தே இருக்கிறது. குறிப்பாக கோயில் சிவாச்சாரியார்கள் அர்ச்சகர்கள் வீட்டு பெண்களை இழுத்துக் கொண்டு ஓடுவது மட்டுமே சாதி ஒழிப்பு என்று இவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள்!

  இந்த வகையில் இந்த இனத்துப் பெரும்பாலான பெண்கள்… அடுத்த தலைமுறை உருவாகக் காரணம் ஆகாமல், சிவாச்சாரியர், அர்ச்சகர் இனம் அழிவதற்கு துணை போய்விட்டார்கள்! இது முழுக்க முழுக்க ஒரு இன அழிப்பே! இன அழிப்பே! இன ஒழிப்பே! இந்தத் தவறுகளைத் தெரிந்தே செய்பவன் இன அழிப்பு என்று மேடையில் பேசத் தகுதியற்றவன்.

  எனவே தமிழகத்தில் இருக்கின்ற எண்ணற்ற கோவில்களை கட்டிக் காப்பதற்கு நாம் இந்த வகையில் ஏதாவது செய்தாக வேண்டும்! அதற்காகத்தான் கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை என்று அமைத்து விஷ்வ ஹிந்து பரிஷத் பயிற்சிகளைக் கொடுத்தது!

  அதாவது, கிராமக் கோயில் பூஜாரிகள் பேரவை மூலம், கிராமக் கோவில்களில் பூஜை செய்யும் பூஜாரிகள், அர்ச்சகர்களுக்கு ஒழுக்கமாக நடத்தல், குளித்து திருநீறு குங்குமம் திருமண் இட்டுக் கொண்டு சுத்தமாக இருப்பது, குறைந்தபட்சம் குறிப்பிட்ட சில மந்திரங்களையாவது சொல்வது, பக்தர்களிடம் பண்புடன் நடந்து கொண்டு, அவர்களின் வாழ்க்கைக்கு தங்களது நடத்தைகள் மூலம் நல்ல வழி காட்டுவது போன்ற பயிற்சிகளைக் கொடுத்து வந்தது.

  எனவே அனைத்து சாதிகளைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்தான் என்பதை எப்போதோ இந்து மதம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. அதற்கு நாம் எதிரி இல்லை! நம் ஹிந்து மத ஆலயங்களையும் நடைமுறைகளையும் பாதுகாப்பதற்கு நாமே பல நடவடிக்கைகளை இதுபோல் எடுத்து இருக்கிறோம்! எனவே இப்போது அதுவல்ல விஷயம்!

  ஆகமப்படி பூஜை நடைபெறும் ஆலயங்களில் அந்த ஆகமங்களை மீறி உள்ளே நுழைப்பதைத் தான் நாம் எதிர்க்கிறோம்!

  கொடிமரம் இருக்கின்ற ஆலயங்களில் பிரம்மோத்ஸவம் நடக்கின்ற ஆலயங்களில் அப்படியெல்லாம் யார் வேண்டுமானாலும் பூஜை செய்ய உள்ளே நுழைய முடியாது! வெறுமனே ஆகமம் படித்துவிட்டார்கள் என்றதற்காக எவர் வேண்டுமானாலும் பூஜைகளுக்கு இறங்கிவிட முடியாது. ஆகமம் அறிந்தவர் இத்தகைய உண்மைகளைத் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்!

  அரசின் குருட்டாம்போக்கு தனத்துக்கு நம் ஆலயங்களும் ஆகமங்களும் சம்பிரதாயங்களும் இரையாவது நிச்சயம் கடுமையாக எதிர்க்கப்பட வேண்டியதே! பக்தியிலும் ஆன்மிகத்திலும் கோயில்களிலும் முக்கியமாக இறைவனின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரும் கடுமையாக எதிர்க்கத்தான் வேண்டும்!

  வெறும் ஆகமப் படிப்பும் பயிற்சியும் மட்டுமே போதும் என்றால், எம்.எல்.ஏ.,க்கள் ஆவதற்கும், அமைச்சர்கள் ஆவதற்கும் கூட படிப்பும் பயிற்சியும் குறைந்த பட்ச கல்வி அறிவும் தேவை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும்.

  வெறுமனே எங்கப்பன், எங்க பாட்டன், எங்க குடும்பம், நாங்க யார் தெரியுமா என்றெல்லாம் உதார் விட்டுக் கொண்டு தமிழைக் கூட சரியாக உச்சரிக்கத் தெரியாமல் திரியும் அறிவிலிகளால், அவர்களின் ஆட்சியினால் இந்த நாடு எக்காலமும் உருப்படாது! நாசமடையவே செய்யும்!

  கிறிஸ்தவர்களிடம் ஓட்டுப் பிச்சை பெற்று ஆட்சிக்கு வந்த ஹிந்து விரோத அரசு இப்போது கிறிஸ்தவர்களின் சதித் திட்டத்தை செயல்படுத்துவதற்காகவே இத்தகைய செயல்களைச் செய்து வருகிறது என்ற குற்றச்சாட்டுகள் பரவலாக இந்து இயக்கங்களால் எழுப்பப்பட்டு வருகின்றன!

  ஏற்கெனவே தேச ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் விதமாகப் பேசி வரும் தேசவிரோத பாதிரியார் ஜெகத் கஸ்பர் மற்றும் கனிமொழி ஆகியோருக்கு இடையேயான ‘தமிழ்’ப் பெயரால் இயங்கும் திரைமறைவு நாசகார திட்டங்கள் இப்போது சிறுபான்மை ஓட்டுப் பிச்சை விடியல் ஆட்சியில் செயல் படுத்தப் படுவதாக உள்ளக் கொதிப்புடன் கூறுகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

  தமிழகத்தில் 40 ஆயிரம் கோயில்கள் இருந்தவை என்று ஆவணம் சொல்கிறது! இவற்றில் 30 ஆயிரத்துக்கும் மேலான கோவில்கள் பாழ்பட்டு ஒருவேளை பூஜைக்கும் வழியின்றி அறநிலையத் துறையால் சரியானபடி நிர்வகிக்க இயலாத சூழலில் கிடக்கின்றன. மீதம் உள்ள 10,000 கோவில்களில் வெகுசில கோயில்களே பெரிய கோயில்களாக உள்ளன. அவற்றில் மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். அந்தக் கோயில்களின் மக்களிடையே உள்ள செல்வாக்கை குறைக்கவும், அவற்றை அழித்து ஒழிக்கவும் கிறிஸ்தவ பின்னணியில் அமைந்த நாத்திக திராவிட அரசு இப்போது கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது கண்கூடாகத் தெரிகிறது!

  அதனால்தான் மு க ஸ்டாலின் ஏற்கெனவே சனாதன ஒழிப்பு மாநாடுகளில் கலந்து கொண்டு ஹிந்து ஆன்மீக விரோத கருத்துக்களை பட்டவர்த்தனமாகத் தெரிவித்த காரணத்தால், அவர் முதலமைச்சராக இருந்தாலும் நடுநிலையுடன் செயல்பட மாட்டார் என்பதால், இந்து சமய அறநிலையத்துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கக் கூடாது என, முதல்வருக்கு உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஸ்ரீதரன், தனது உள்மனம் உந்தப் பட்டு ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார். ஆனால் அந்த வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

  அவர் தாக்கல் செய்த மனுவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் ஒரு நாத்திகர் என்பதால், இந்து சமய அறநிலையத் துறையின் ஆலோசனைக் கூட்டங்களுக்குத் தலைமை வகிக்கத் தடை விதிக்க வேண்டும்! இந்து மதத்தைப் பின்பற்றுவதாக இந்துக் கடவுள் முன் உறுதிமொழி எடுத்த பிறகே, இக்கூட்டங்களுக்குத் தலைமை வகிக்க முதல்வருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

  ஆனால் அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, இந்தியா மதச்சார்பற்ற நாடு, இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு கருத்துச் சுதந்திரத்தை வழங்கியுள்ளது. முக்கியப் பதவிகளை வகிப்பவர்கள் பதவியேற்கும்போது, கடவுள் பெயரிலோ, அரசியலமைப்புச் சட்டத்தின் பெயரிலோ பதவியேற்க அரசியலமைப்புச் சட்டம் அனுமதி வழங்கியுள்ளது. எந்த மதமும் குறுகிய மனப்பான்மையைப் போதிக்க வில்லை, பிற மதத்தினரைப் புண்படுத்தக் கூறவில்லை, மனுதாரரின் மத உணர்வு ஏற்கத்தக்கதல்ல, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல… எனக் கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. அதுமட்டுமல்ல… சம்பந்தப்பட்ட நீதிபதியின் முன் அனுமதி பெறாமல் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்ய மனுதாரருக்கு ஐந்து ஆண்டுகள் தடை விதித்தும் உத்தரவிட்டது.

  madras high court
  madras high court

  நீதிமன்றம் சுட்டிக் காட்டிய ‘குடிமக்களுக்கான கருத்துச் சுதந்திரத்தின் படி’ பார்க்கும் போது, நமக்குத் தோன்றுவது இதுதான்! மதசார்பற்ற அரசியலமைப்பில் அறநிலையத்துறை என்ற மத அமைப்பு எங்கே வந்தது?! அரசு மதசார்பற்றதாக இருக்கலாம், அது கட்டுப்படுத்தும் அல்லது நிர்வகிக்கும் அறநிலையத்துறை மதச்சார்பு நிறுவனம் ஆயிற்றே! அரசுப் பொறுப்பேற்க வேண்டுமானால் கடவுள் பெயரிலோ அல்லது கடவுள் பெயர் இல்லாமலோ ஏதோ ஒன்றின் அடிப்படையில் அவர்களின் நம்பிக்கையின் அடிப்படையில் பதவி ஏற்கலாம்… ஆனால், அறநிலையத்துறை என்ற மதம் சார்பு நிறுவனக் கூட்டங்களில் மத நம்பிக்கையின் அடிப்படையில் உறுதி மொழி ஏற்க வேண்டும் என்று அம்மதத்தைச் சார்ந்த ஒருவர் கேட்பது, அவருக்கான கருத்துரிமை தானே! என்றாவது நீதிமன்றம், சனாதன எதிர்ப்பு என்ற பெயரில் காழ்ப்புணர்வையும் மதப்பிளவையும் ஏற்படுத்தும் மாநாட்டை தடை செய்ததா?! அல்லது அதில் உறுதிமொழி ஏற்றவர் கோயில்களை நிர்வகிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ளும் முன் ஆலய ஆகம நிர்வாகத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு என்று அவர் உறுதிமொழி ஏற்பது குறித்து ஏன் கேள்வி எதுவும் எழுப்பவில்லை?!

  மதம் குறுகிய மனப்பான்மையைப் போதிக்கவில்லை, ஆனால் மத அமைப்பின் கூட்டத்தில் அமர்பவர் குறுகிய மனப்பான்மை கொண்டிருக்கிறாரே! இந்து மதம் மட்டுமே பிற மதத்தினரைப் புண்படுத்துமாறு கூறவில்லை, ஆனால் இந்த மத நிறுவனத்தின் கூட்டத்தில் பங்கேற்பவர் இந்த மதத்தினரின் பழக்க வழக்கங்களை கிண்டல் கேலி செய்து புண்படுத்தும்படி கருத்துக் கூறியிருக்கிறாரே!

  இன்று அதே நீதிமன்றம் இப்போதைய பின்விளைவுகளைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. எத்தகைய உள்நோக்கத்துடன் ஒரு குழு, ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து தங்களது மறைமுக செயல்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை, நீதிமன்றம் கண்டும் காணாமலும் போனால், அபலைகளின் நீதிக்கான கடைசிக்கட்ட புகலிடமாக இருப்பது கடவுள் சந்நிதிதான்! அந்தக் கடவுள் சந்நிதியில் இருந்தே அவர்களை விரட்டிவிட அரசும் போலீஸும் அராஜகத்தில் ஈடுபட்டால், வயிறெரிந்து, மண் தூற்றி, எல்லாம் நாசமாகப் போகட்டும் என்று சாபம் கொடுப்பதைத் தவிர எல்லாத் தரப்பினாலும் கைவிடப் பட்டவர்களுக்கு வேறு வழி தெரியாது! அதைத்தான் நீதிமன்றமும் மத்திய அரசும் விரும்புகிறதா?!

  இன்றைய இந்தச் சூழல், ஹிந்து விரோதிகளுக்கு அல்லது இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுக்கு கொண்டாட்டமாக தான் போயிருக்கிறது! பின்னணி என்ன? மறைமுக உள்நோக்கம் என்ன? இவர்களின் திட்டங்கள் என்ன? என்பதையெல்லாம் அறியாத அல்லது அறிந்து கொள்ள இயலாத நீதிமன்றத்தின் முன் ஹிந்து பெரும்பான்மையினர் கையறு நிலையில் கதறத்தான் வேண்டி இருக்கிறது!

  அனைத்து சாதி அர்ச்சகர் என்று ஒரு சாதிய கண்ணோட்டத்துடன் இந்த அரசு சமூகங்களை பிளவுபடுத்தும் வேலையை மட்டுமே செய்து வருகிறது என்பது கண்கூடு! ஆகம முறையில் செயல்படும் கோயில்களின் ஆகமங்களை மதிக்காமல் அவற்றை சிதைப்பதிலேயே உள்நோக்கத்துடன் கவனமாக செயல்படும் இந்த அரசுக்கு, மிகவும் சிதிலமடைந்த அல்லது கேட்பாரற்றுப் போயுள்ள கிராமக் கோயில்கள் கண்ணில் படவில்லையா?

  இதேபோல் வன்னியர்கள் பூஜை செய்யும் அவர்களின் கோயில்களில் வேற்று சாதி நபர்களை பூசைக்கு அறநிலையத்துறை நியமனம் செய்யுமா? அப்படிச்செய்தால் வன்னிய சமுதாயம் அல்லது தேவர் கோனார் உள்ளிட்ட வேறு பிற சமுதாயங்கள் அவரவர் சமுதாயக் கோயில்களில் அறநிலையத்துறை மூக்கை நுழைப்பதை ஏற்குமா? அமைதியாக இது போன்று கண்ணீர் விட்டுக்கொண்டு வேடிக்கை பார்க்குமா?

  தில்லை நடராசனையும் திருவங்கநாதனையும் எதுவோ வைத்து எதுவோ நாள் என்று இடித்து முழங்கிய நாசகார சக்திகளின் கைகளில், கோயில்கள் ஒப்படைக்கப் படுவது, இந்திய அரசியலமைப்பு சட்டங்களுக்கே வெட்க கரமான ஒன்று! ரத்தவெறி பிடித்த ஓநாயின் கைகளில் ஆட்டுக் குட்டிகளை ஒப்படைக்கும் நரித்தந்திரம் அல்லவா?!

  EVR Karunanidhi
  EVR Karunanidhi

  பக்தர்களிடம் செல்வாக்கு உள்ள… ஆகம சாத்திரத்தில் சிறப்பாக செயல்படும் கோயில்களைத் தேர்ந்தெடுத்து, அனைத்து சாதி அர்ச்சகர் என்ற போர்வையில் அவ்வாலயங்களின் ஆசாரங்களை முற்றிலும் குலைக்கும் ஈனத்தனமான வேலையில் இவர்கள் ஏன் ஈடுபட வேண்டும்?!

  ஹிந்து மதத்தை ஹிந்து தர்மத்தை வாழவைத்த பாரம்பரிய மன்னர்கள் செம்மையாக ஆக்கி வைத்த பூமியை இப்போது இந்துக்கள் அல்லாத பிற மதத்தினரும் நாத்திகர்களும் கபளீகரம் செய்ய நினைக்கிறார்கள்! கோயில்கள் கொள்ளையர்களின் கூடாரமாகி விடக் கூடாது என்று கதை வசனம் சொல்லிக் கொண்டே கோயில்கள் அனைத்தையும் இன்று கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது இந்த நாத்திக அரசு!

  கோயில்களின் ஆசாரங்களையும் ஆகமங்களையும் மக்களின் செல்வாக்கையும் குலைத்து விட்டால் மக்கள் அதிகம் வராமல் போவார்கள்; அதன்பிறகு வேற்று மதங்களுக்கு அவற்றை திறந்து விட வசதியாக இருக்கும்! தாங்கள் கொள்ளையடிப்பதற்கும் மேலும் எளிதாக இருக்கும் என்ற தீய நோக்கத்துடனேயே திராவிட நாத்திக அரசு இயங்குவது பட்டவர்த்தனமாக தெரிகிறது!

  நெற்றியில் குங்குமம் வைத்துக் கொண்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் சேகர்பாபு, துர்கா ஸ்டாலின் வகையறாக்களின் பின்னே மோசமான சதித்திட்டம் இருக்கிறது என்று இந்து இயக்கங்கள் கூறுவதில் உண்மை இல்லாமல் இல்லை!

  ஒரு மதத்தையும் நம்பிக்கையையும் பாரம்பர்ய சின்னங்களையும் இனத்தையும் அழிப்பதற்கு கங்கணம் கட்டிக்கொண்டு ஆட்சிக்கட்டிலில் புகுந்திருக்கும் கிறிஸ்தவ இஸ்லாமிய ஓட்டுப் பிச்சை அரசு இந்தத் தமிழ் நாட்டை நிர்வகிக்க தகுதி அற்றதாகி இருக்கிறது! எனவே இந்திய அரசு, இப்போதே இந்த மக்கள் விரோத தமிழக அரசைக் கலைத்து விடுவது நல்லது. இல்லாவிட்டால் மிகப்பெரும் விபரீதங்களை சந்திக்கும். விஷச் செடியை பெரிதாக வளரவிட்டு, அதன் பிறகு கையை பிசைந்து கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது நல்லதல்ல என்பதே மத்திய அரசுக்கு நாம் கொடுக்கும் எச்சரிக்கை!

  மூத்த பத்திரிகையாளர், வழக்கறிஞர்,. மருத்துவர், எழுத்தாளர் போன்று பலர் தங்கள் அனுபவத்தால் சமுதாய, சமயப் பணி செய்கிறார்கள்! இவர்கள் அரசின் வயது வரம்பில் வரமாட்டார்கள்! நீதிபதி, அரசு ஊழியர் போன்றவர்களை ஓய்வு பெற்றவர் என அழைப்போம்! இவரது செல்வாக்கு அனுபவம் அந்தத் துறையோடு, பணிக்காலத்துடன் முடிந்து விடுகிறது! அவர்களுக்கு அரசு ஓய்வூதியம் தருகிறது.! ஆயின் இறைப் பணியாளர்கள் அனுபவம், என்றும் மக்களால் மதிக்கப்படுவது! ஓய்வறியா தெய்வீகப் பணி அது! வயது ஆக ஆகத்தான் தெய்வப் பணியின் இறைநிலை ஆன்மிக அனுபவம் கிடைக்கப் பெற்று, அன்பர்களுக்கும் நன்மை பயப்பதாய் அமையும்! அத்தகைய பழுத்த அனுபவம் மிக்கவர்களை கோயில்களில் இருந்து விரட்டி விட நினைப்பது உள்நோக்கம் இல்லையா?!

  அத்தகைய நபர்களுக்கு அரசு இதுவரையிலும் ஏதாவது பணி ஆணை கொடுத்திருக்கிறதா?! சம்பளம் கொடுத்திருக்கிறதா?! இதர படிகள் சலுகைகள் கொடுத்திருக்கிறதா?! பணியில் இருந்து நின்றுவிட்டால் ஓய்வூதியம், பணி மூப்பு சலுகைகள் எதுவும் இந்த பாரம்பரிய அர்ச்சகர்கள், சிவாசார்யர்களுக்கு அறநிலையத்துறை கொடுத்திருக்கிறதா?! பின் ஏன் அவர்களை வெளியேற்ற வேண்டும்!?

  இந்துக்களின் ஆன்மிக பிணைப்பை அறுக்க வேண்டும்.‌‌ சம்ஸ்க்ருதத்துக்கு எதிராக தமிழ் அர்ச்சனை! ஆன்மிகத்தால் இந்த நாடு ஒன்று என்ற சிந்தனையை ஒழிக்கவேண்டும்!
  காசி சிவன் வேறு மயிலை கபாலி சிவன் வேறு… இதுதான் தமிழ் அர்ச்சனையின் அடுத்தகட்ட நகர்வு!

  இதற்காகத்தான், கொரோனா கால ஊரடங்கு என்று காரணம் கூறி, கோயில்களை அடைத்து, விழாக்களைத் தடுத்து, பக்தர்களை கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்து, அனைத்து விதமான நயவஞ்சகத் தனங்களையும் இந்த அரசு நிறைவேற்றியிருக்கிறது!

  ஏன் இதே அளவுகோல் மற்ற மதங்களின் கூட்டங்களுக்கோ, மத தலங்களுக்கோ இல்லை! இந்த அரசின் விசுவாசம் பல்லிளிக்கிறதே!

  எனவே… நாத்திக தமிழக அரசின் பிடியில் இருந்து அறநிலையத்துறை வெளியேற்றப் பட வேண்டும்! ஆலயங்கள் விடுவிக்கப் பட வேண்டும்!

  1 COMMENT

  1. mathasaarbinmai porvaiyil anniya kalacharathirku thunai sendru mannin kalacharathai kulaikum naathiga arasu thannai maatrikolavitaal naduvan arasu aavana seyya vendum

  Comments are closed.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,139FansLike
  368FollowersFollow
  40FollowersFollow
  74FollowersFollow
  1,588FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-