ஆரோக்கியம்: டிப்ஸோ டிப்ஸ்:

நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
health tips 1

காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும். ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.

இரவு நேரத்தில் பப்பாளிப் பழம் ஒரு துண்டு சாப்பிடுவதன் மூலம் மாதவிலக்கு பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். ரத்தம் சுத்தம் அடையும். புற்றுநோயையும் தவிர்க்கலாம்

தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் ஒருவித மினுமினுப்பை பெறலாம்.

பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.

காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.

உணவு உண்ட பிறகு ஒரே ஒரு வெற்றிலை சாப்பிடுவதால் பல்வேறு பயன்கள் உள்ளன. அஜீரணம், வாய் துர்நாற்றம், உடம்பில் வியர்வையால் நாற்றம், மூச்சடைப்பு , இரைப்பை, பசியின்மை போன்றவற்றிலிருந்து வெற்றிலை விடுதலை தரும்.

வெற்றிலையை புகையிலையோடு உண்டால் புற்றுநோய் வரும். வெறும் வெற்றிலை உண்டால் போதும். பாக்கோடு சாப்பிட வேண்டும் என்று அவசியம் இல்லை.

உ‌ள்ள‌ங்கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டிரு‌ந்தா‌ல் மருதா‌ணி இலையுட‌ன் ‌சி‌றிது வச‌ம்பு, ம‌ஞ்ச‌ள் க‌ற்பூர‌ம் சே‌ர்‌த்து அரை‌‌த்து, ஆ‌ணி உ‌ள்ள இட‌த்‌தி‌ல் தொட‌ர்‌ந்து க‌ட்டி வர ஒரு வார‌த்‌தி‌ல் குணமாகு‌ம். இதே போல கா‌லி‌ல் ஆ‌ணி ஏ‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் அ‌ந்த இட‌த்‌தி‌ல் நசு‌க்‌கிய வெங்காயம் அல்லது பூ‌ண்டை வை‌த்து‌க் க‌ட்டி வ‌ந்தாலு‌ம் குண‌ம் ‌கிடை‌க்கு‌ம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.