அமைச்சர் காமராஜின் உறவினர் வீடு, அலுவலகங்களில் வருமானவரித்துறை திடீர் சோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் காமராஜின் உறவினர் சேரங்குளம் மனோகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
வரிஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரை அடுத்து சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




