கேரள மாநிலம் குரவிலங்காட்டைச் சேர்ந்த கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த ஜூன் 28ஆம் தேதி ஜலந்தர் பிஷப்பாக இருந்த பிராங்கோ மீது பாலியல் வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.
தொடர்ந்து போலீசார் பிஷப் பிராங்கோவிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு அவருக்கு எதிரான ஆவணங்களை திரட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இதனை அடுத்து அவர் செப்டம்பர் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
இதனிடையே பிஷப் ஜாமினுக்கு முயற்சித்து வந்தார். ஏற்கெனவே ஒருமுறை ஜாமின் மறுக்கப்பட்ட நிலையில், 2வது முறையாக ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் வந்தது. இந்த ஜாமின் மனுவை விசாரித்த கேரள நீதிமன்றம் பிஷப்புக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.
மேலும் பிஷப்பின் பாஸ்போடை ஒப்படைக்க வேண்டும், கேரளாவிற்குள் வரக் கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் நீதிபதி விதித்துள்ளார்!




