
மதுரையில் இரண்டு இடத்தில் தீ விபத்து விரைந்து செயல்பட்டு தீயை அணைத்த மதுரை தீயணைப்புத்துறையினர்.
மதுரை மாவட்டம் மதுரை டவுன் தீயணைப்பு நிலையத்திற்கு இன்று தொலைபேசி வாயிலாக எல்லீஸ் நகர் கருமாரியம்மன் கோவில் அருகே பகுதியில் ஒரு வீட்டில் காஸ் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் வந்தது .
இதனை அடுத்து மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அப்பொழுது எரிவாயு சிலிண்டர் இருந்தது கசிவு ஏற்பட்டு தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது . உடனடியாக துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனை தொடர்ந்து தீயணைப்பு நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.. அப்போது மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே பல்பொருள் விற்பனை அங்காடி அருகே மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது என தகவல் வரவே உடனடியாக நேராக அங்கே சென்ற தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்தனர் .
முதற்கட்ட விசாரணையில் தீ விபத்தானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனவும் விரைந்து செயல்பட்டு இரண்டு சம்பவங்களையும் துரிதமாக தீயை அணைத்ததால் பெரும் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை