சி.வி. சண்முகத்துக்கு கொரோனா..?! சுகாதாரத்துறை விளக்கம்!

சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
cvshanmugam
cvshanmugam

சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகத்துக்கு கொரோனா இருப்பதாக இன்று காலை ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில் அதனை மறுத்து உள்ளனர் பொது சுகாதாரத் துறையினர் 

அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அவரது மனைவி இருவருக்கும் கொரோனா டெஸ்ட்டில் நெகட்டிவ் என்று வந்துள்ளதாகவும், வழக்கமான செக்கப்பிற்காக அப்போல்லாவுக்கு அவர் சென்றிருக்கிறார் என்றும் தெரிவித்தனர். 

சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளதாக தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சென்னை கீரிம்ஸ்ரோடு பகுதியில் உள்ள தனியார்  மருத்துவமனையில் அமைச்சர் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதை அமைச்சரின் நேர்முக உதவியாளர் ராஜாராமன் மறுத்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் 18ஆம் தேதி சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் சோதனை முடிவுகள் 19ஆம் தேதி தெரிய வந்துள்ளதாகவும், அதில் கொரோனா இல்லை  என குறிப்பிடப்பட்டிருப்பதாகவும் பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.