தமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா; சென்னையில் மட்டும் 1,380 பேருக்கு உறுதி!

உரத்த சிந்தனை சற்றுமுன் சென்னை தமிழகம்
corona worldwide
corona worldwide

தமிழகத்தில் இன்று 2516 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும் 1380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 7ஆவது நாளாக தொற்று பாதிப்பு 2 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த பாதிப்பு 64,000ஐ தாண்டியுள்ளது. 

சென்னையில் மட்டும் இன்று 1,380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 44,000ஐ தாண்டியது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 39 பேர்  உயிரிழந்துள்ளனர் இதையடுத்து தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புஎண்ணிக்கை 800ஐ தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா   உயிரிழப்பு எண்ணிக்கை 833ஆக  அதிகரித்துள்ளது

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று 1,227 பேர் டிஸ்சார்ஜ்  செய்யப்பட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.  இதையடுத்து கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 35,339ஆக  உயர்ந்துள்ளது.

covidjuna
covidjuna
covidjunc
covidjunc
covidjunb
covidjunb

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.