December 7, 2024, 8:47 AM
27.3 C
Chennai

5 ரூபாய் டாக்டர் திருவேங்கடத்திற்கு சிலை திறப்பு!

thiruvenkadam
thiruvenkadam

5 ரூபாய் டாக்டர் என அழைக்கப்பட்ட மறைந்த திருவேங்கடத்திற்கு வியாசர்பாடியில் சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

வடசென்னையைச் சேர்ந்த மருத்துவர் மறைந்த திருவேங்கடம் வீரராகவன்.1973ஆம் ஆண்டு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றவர். ஏழை மக்கள் அதிகளவில் வசித்துவரும் வியாசர்பாடியில் உள்ள மக்களுக்கு ஆரம்பத்தில் இரண்டு ரூபாய்க்கு சிகிச்சை பார்த்து வந்தார். பின்னர், ஐந்து ரூபாய் வாங்கினர்.

இதற்கு அங்கிருந்த மருத்துவர்கள் சிகிச்சைக்கு குறைந்தது 100 ரூபாய் வாங்க வேண்டும் என இவரை வலியுறுத்தினர். அதுமட்டுமல்லாமல் இவருக்கு எதிராக ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனால், அதற்கு மருத்துவர் திருவேங்கடம் ஒத்துப்போகவில்லை.

மாறாக “எந்த கட்டணமும் இல்லாமல் நான் படித்தேன். அதற்கு நான் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜருக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும். அதனால், என்னைத் தேடி வரும் நோயாளிகளிடம் அதிகளவில் கட்டணம் வசூலிப்பதில்லை.

2015ஆம் ஆண்டில் பெய்த மழைக்குப் பின்னர் வியாசர்பாடியில் இருந்து வெளியேறினேன். ஆனால், அங்குள்ள கிளினிக்கில் தொடர்ந்து மருத்துவம் பார்த்து வருகிறேன்.

ALSO READ:  ஆதார் புதுப்பிக்க சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை!

வியாசர்பாடி குடிசைப் பகுதி மக்களுக்கு என்று ஒரு மருத்துவமனை கட்டி சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதே என் கனவு.

தினமும் இரவு 8 மணி முதல் இரவு 10 மணி வரை எருக்கஞ்சேரியில் உள்ள கிளினிக் மற்றும் வியாசர்பாடியில் அசோக் பில்லர் அருகில் இருக்கும் கிளினிக்கில் மருத்துவம் பார்த்து வருகிறேன்.

pathmasri award
pathmasri award

எனது மனைவி ரயில்வே அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். எனது மகன் தீபக் மற்றும் மகள் ப்ரீத்தி மொரீஷியஸில் மருத்துவம் படித்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் ஒரு மருத்துவமனை கட்ட உதவியாக இருப்பார்கள்” என நேர்காணல் ஒன்றில் தெரிவித்து இருந்தார். இவருடன் படித்தவர்கள் வெளிநாட்டில் மருத்துவர்களாக இருந்தபோதும் சென்னை நகர மக்களுக்கு குறிப்பாக வட சென்னை மக்களுக்கு மருத்துவ சேவை செய்து வந்தவர் டாக்டா் திருவேங்கடம்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, தனியாா் மருத்துவமனைகளில் பணிபுரிந்த நிலையில் ஓய்வைப் பற்றி கவலைப்படாமல் வீட்டில் இருக்கும் நேரங்களில் கூட ஏழை எளிய மக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்தார். 47 ஆண்டுகள் இடைவிடா மருத்துவ சேவையாற்றி கடந்த 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி காலமானார்.

ALSO READ:  செங்கோட்டையில் தாயின் மடியில் அறக்கட்டளை முதியோர்களுக்கு புத்தாடை வழங்கல்!

டாக்டா் திருவேங்கடம் அவா்களின் சேவையை பாராட்டி மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்பிக்கை சிகா சமூக நல அமைப்பு டாக்டா் திருவேங்கடத்தின் திருஉருவ சிலை ஒன்றை அப்பகுதி மக்களின் ஒத்துழைப்புடன் அமைத்துள்ளனர்.

வட சென்னை பகுதியான வியாசா்பாடி, கணேசபுரம், ஆள்வாா் தெருவில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் பல்வேறு பிரபலங்களும், தொண்டு நிறுவனத்தினரும் கலந்து கொள்கின்றனர்.

author avatar
Suprasanna Mahadevan

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.02 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் டிச.01 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம்: டிச.01ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம||श्री:|| !!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்!!ஸ்ரீ:!!श्री:श्रीमते...

ஃபெங்கல் புயல்: வட தமிழகத்தில் கன மழை! எச்சரிக்கை நடவடிக்கைகள்!

உதவி வேண்டுவோர் 1800 425 1515 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். உதவி கோரும் பெண்கள் 155370 என்ற எண்ணை பயன்படுத்திக் கொள்ளலாம்.

பஞ்சாங்கம் நவ.30 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

‘அதானியைக் கைது செய்’ என்று சொல்லும் ராகுலிடம் சில கேள்விகள்!

கவுதம் அதானி ஒரு முன்னணி இந்தியத் தொழிலதிபர். அவர் கைது செய்யப்பட வேண்டும் என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல்