spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?குழந்தைகள் கையில் மொபைல்! தேவையற்ற பதிவிலிருந்து பாதுகாக்க..!

குழந்தைகள் கையில் மொபைல்! தேவையற்ற பதிவிலிருந்து பாதுகாக்க..!

- Advertisement -
phone
phone

ஆன்லைன் வகுப்பின் பொழுது குழந்தைகளுக்கு மொபைல் போனில் தேவையற்ற வீடியோக்கள் மற்றும் அப்ளிகேஷன்கள் மூலம் வரும் ஆபத்தை தடுக்க மொபைல் போனில் உள்ள ஆப்ஷன்களை திருத்துவது எவ்வாறு என்பதை பார்க்கலாம்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாணவர்கள் யூடியூப் மற்றும் ப்ளே ஸ்டோர் போன்ற சமூக வலைதள பக்கங்களை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் ஆன்லைன் வகுப்பு பயிலும் போது தேவையற்ற வீடியோக்கள் மற்றும் தேவையற்ற செயலிகளை நீங்கள் யூடியூப் மற்றும் ப்ளே ஸ்டோரில் உள்ள ஆப்ஷன்களை பயன்படுத்தி அதனை பார்க்க முடியாதவாறு தவிர்க்கலாம்.
அதனை எவ்வாறு மேற்கொள்வது என்பதை பார்க்கலாம்.

முதலில் நீங்கள் யூடியூப் பக்கத்திற்கு சென்று வலது பக்கத்தின் மேலே Profile என்னும் ஆப்ஷன் இருக்கும் அதனை கிளிக் செய்து பின்னர் செட்டிங்ஸ் என்னும் ஆப்ஷனை தேர்வு செய்யவும் பிறகு உங்களுக்கு ஜெனரல் என்ற ஒரு ஆப்ஷன் அதில் காண்பிக்கும் அதனை கிளிக் செய்யவும் பிறகு கீழே உங்களுக்கு Restrictions mode என்னும் ஒரு ஆப்ஷன் இருக்கும் அதனை தேர்வு செய்வதன் மூலம் உங்களுடைய யூடியூப் வலைத்தளம் மிகவும் பாதுகாப்பானது என்பதை நீங்கள் உறுதி படுத்திக் கொள்ளலாம்.

அடுத்ததாக ப்ளே ஸ்டோரில் அதேபோல வலது பக்கத்தின் மேலே Profile என்னும் ஆப்ஷன் இருக்கும் அதனை தேர்வு செய்து பிறகு நீங்கள் Settings என்னும் ஆப்ஷனை தேர்வு செய்த பிறகு உங்களுக்கு கீழே Family Parental Control,Parent Guide என்னும் ஆப்ஷன் இருக்கும்.

அதை தேர்வு செய்து அதில் நீங்கள் Parental Control என்பதை கிளிக் செய்தால் உங்களுக்கு Parental Controls are off என்ற ஆப்ஷன் இருக்கும் அதை முதலில் நீங்கள் ON செய்யவும். அடுத்ததாக நீங்கள் 4 எண் கொண்ட இலக்கில் பாஸ்வேர்டு உள்ளிட்டு அதனை சேமித்துக் கொள்ளவும்.

பிறகு உங்களுக்கு Apps and Games மற்றும் Movies என்னும் ஆப்ஷன் உங்களுடைய திரையில் தோன்றும். அதில் உங்களுடைய குழந்தைகளின் வயது உள்ளிட்டவற்றை பதிவு செய்துகொண்டால் தேவையில்லாத அப்ளிகேஷன்களை உங்கள் குழந்தை டவுன்லோட் செய்வதை தவிர்க்கலாம்

அதேபோல Movie என்ற ஆப்ஷனை பொறுத்தவரை நீங்கள் U என்ற ஆப்ஷனை தேர்வு செய்தால் மிகவும் நல்லது அதை தேர்வு செய்வதன் மூலம் உங்கள் குழந்தைகளை தேவை இல்லாத படங்களை பார்ப்பதை தவிர்க்கலாம். என காவல்துறை எச்சரிக்கை வீடியோ பதிவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe