புயல் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே அரசு சிறப்பாக செயல்படுகிறது: செந்தில் பாலாஜி

Published:

senthil balaji - 2026

புயல் வருகின்றது என்று அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது. நிவாரணப் பணிகளில் அரசு மெத்தன போக்கினையே காட்டுகிறது என்று கூறினார் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி.

உள்ளாட்சி மன்றத் தேர்தல் முடிந்திருந்தால், உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டு இருப்பார்கள் என்று அவர் கூறினார்.

கரூர் மாவட்ட அமமுக., சார்பில், கஜா புயல் தாக்கிய மாவட்டங்களுக்கு நிவாரணப் பணிகளை அனுப்பும் பணி நடைபெற்றது. இதில், பாய்கள், 5 கிலோ அரிசி சுமார் 5 ஆயிரம் சாக்குகள், வேஷ்டி, சட்டை, தண்ணீர் பாட்டில்கள் என்று சுமார் 7 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமமுக., அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி, செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், புயல் பாதித்த மாவட்டங்களில் முதலமைச்சர் மக்களை தரை வழியாக சென்று பார்வையிட பயம் ஏற்பட்டதால் விமானம் வழியாக சென்றுள்ளார். புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் அமைச்சர்கள் தப்பிச் செல்லும் போது, அது மக்களின் கோபத்தினையும், அரசின் மீதுள்ள கோபத்தையும் தான் எதிரொலிக்கின்றது.

ALSO READ:  2036 ஒலிம்பிக் போட்டிக்கு குழந்தைகளை இப்போதே தயார் படுத்துவோம்: பிரதமர் மோடி!

தமிழக அரசு ஒரு கண் துடைப்புக்காக வெற்று அறிக்கைகள் மூலமாகவே செயல்பட்டு வருகின்றது. புயல் பாதித்த இடங்களில் எந்த ஒரு சிறப்பு திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல், அரசு தவிக்கிறது. ஆகவே மக்கள் தக்க பாடத்தினை தேர்தல் நேரத்தில் வெளிக் கொணர்வார்கள்.

புயல் வருவதற்கு முன்னர் அறிவிப்பு கொடுப்பதில் மட்டுமே சிறப்பாக தமிழக அரசு செயல்பட்டு வந்தது. ஆனால், தற்போது., புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் நிவாரணப்பணிகளில் மெத்தனம் காண்பிக்கப் படுகிறது. இந்த கஜா புயலை பொறுத்தவரை, எடப்பாடி பழனிச்சாமி அரசு ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது. காரணம் அந்த அரசுக்கு தகுதி இல்லை. ஒருவேளை உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் கூட புயல் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாக செயல்பட்டிருப்பார்கள்.

ஆனால் தேர்தல் நடத்துவதற்கு பயப்படும் இந்த எடப்பாடி அரசு நீதிமன்றத்தின் மூலம் தேர்தலை தள்ளிப்போட்டு வருகிறது.

செந்தில்பாலாஜியின் பேட்டி…

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img