தமிழகத்தில் ஜூலை 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
lockdown chennai
lockdown chennai

தமிழகத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் ஜூலை 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப் படுவதாக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் தற்போது உள்ள பொது முடக்க கட்டுப்பாடுகள் வரும் ஜூலை மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது

ஜூலை 31 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை ஊரடங்கை நீட்டித்து முதலமைச்சர்  எடப்பாடி பழனி சாமி உத்தரவு  பிறப்பித்துள்ளார் . அதே நேரம் சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் தற்போதுள்ள முழு ஊரடங்கு ஜூலை 5 வரை தொடரும்  தெரிவிக் தெரிவிக்கப்பட்டு உள்ளது 

சென்னையில்  ஜூலை 5 ஆம் தேதி முதல் 4 ஞாயிற்றுகிழமைகளில் எந்த வித தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும். 

மதுரை மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் ஜூலை 5 வரை முழு ஊரடங்கு அமல்  படுத்தப்படும்.  அடுத்து மாவட்டங்களுக்குள் தனியார் மற்றும் அரசுப் போக்குவரத்து ஜூலை 1 – ஜூலை 15 வரை தற்காலிகமாக நிறுத்தம்  செய்யப்படும்.

கிராமப்புறங்களில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான கோயில், மசூதி, தேவாலயத்தில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி  அளிக்கப்படுகிறது. 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் தற்போதுள்ள நடைமுறைப்படி தரிசனம் அனுமதிக்கப்படாது  என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் எந்த வித தளர்வும் இன்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும் என்று முதலமைச்சரின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.