தமிழகத்தில் இன்று 3,949 பேருக்கு கொரோனா; சென்னையில் 2,167 பேருக்கு உறுதி!

Published:

corona virus
corona virus

தமிழகத்தில் இதுவரை இல்லாத விதமாக ஒரே நாளில் 3,949 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 86,224 ஆக உயர்ந்துள்ளது. 

அதே நேரம் சென்னையிலும் அதிக பட்ச அளவாக இன்று 2,167 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டது. சென்னையில் கொரோனா பாதிப்பு ஒரே நாளில் 2 ஆயிரத்தை தாண்டியது. சென்னையில் மட்டும் மொத்தம் 55,969 பேர் வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர் 

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,212 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். இதுவரை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 47,749 ஆக உயர்வு கண்டுள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 62 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,141 ஆக அதிகரித்துள்ளது. 

இன்று, மதுரை மாவட்டத்தில் மேலும் 303 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. மதுரை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவாக இன்று 300க்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது 

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

சென்னையை அடுத்து, சென்னையை ஒட்டிய மாவட்டங்களான செங்கல்பட்டு மாவட்டத்தில் 187 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 154 பேருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 75 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டது. 

மாவட்டவாரியாக பாதிப்பு நிலவரம்

corona junb
corona junb

Related articles

Recent articles

spot_img