இட்லி தோசைக்கு ஏற்ற டிஷ்! தட்டை காலி செய்யும் தக்காளி டிஷ்!

சமையல் புதிது நலவாழ்வு லைஃப் ஸ்டைல்
thakkali pasiparuppu sambar

தக்காளி பயத்தம்பருப்பு சாம்பார்

தேவையானவை:

பெங்களூர் தக்காளி – 3,
சின்ன வெங்காயம் – 6,
பச்சை மிளகாய் – 2,
வேகவைத்த பயத்தம்பருப்பு – கால் கப்,
புளி – நெல்லிக்காயளவு,
மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
நறுக்கிய கொத்தமல்லித்தழை – 2 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன்,
உப்பு -தேவைக்கேற்ப.

வறுத்துப் பொடிக்க:
கடலைப் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் ஒன்று,
தனியா – 3 டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்

தாளிக்க:
கடுகு – ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன்,
கறிவேப்பிலை, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி வறுக்கக் கொடுத்தவற்றைச் சிவக்க வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாகப் பொடித்து வைக்கவும். அதே வாணலியில் மீதி எண்ணெயை ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.

புளியைத் தண்ணீரில் கரைத்து (2 டம்ளர் வருமாறு), அடிகனமான பாத்திரத்தில் ஊற்றி… உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, வதக்கிய காய்களையும் சேர்த்துக் கொதிக்கவிடவும். காய்கள் வெந்ததும், வேகவைத்த பயத்தம்பருப்பை சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும் வறுத்துப் பொடித்த பொடியை சேர்க்கவும். பிறகு, தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்துச் சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிடவும். கொத்தமல்லித்தழை தூவி அலங்கரிக்கவும்.

இதை இட்லி, தோசைக்கு சைட் டிஷ்ஷாக பயன்படுத்தலாம். சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.