19/10/2019 8:18 PM
கட்டுரைகள் காந்தி கொலையும் பின்னணியும் பகுதி 120

காந்தி கொலையும் பின்னணியும் பகுதி 120

-

- Advertisment -
- Advertisement -

ஆப்தே,கோட்ஸே பயணித்த ரெயில் ஜனவரி மாதம் 21ந் தேதி,புதன்கிழமையன்று நண்பகலுக்கு சற்று முன்பாக கான்பூர் சென்றடைந்தது.

அதற்குள்ளாக,டெல்லி போலீஸார் ‘ உரியமுறையில் ‘ மதன்லால் பஹ்வாவிடம் விசாரணை நடத்தி விவரங்களை ’கறந்தனர்’.

அஹமத்நகரை சேர்ந்த ‘ கிர்க்ரீ சேத் ‘ ( கார்கரே ),பூனாவில் செயல்பட்டு வந்த ஒரு ‘ராஷ்ட்ரீய ‘ பத்திரிகையின் மேலாளர்,’ தேஷ்பாண்டே ‘ என்று தன்னை அழைத்துக் கொண்டு மெரினா ஹோட்டலில் தங்கிய ஒரு நபர் ( ஆப்தே ).தாடி வைத்திருந்த ஒரு நபர் ( திகம்பர் பாட்கே ),20 வயது மதிக்கத்தக்க அந்த நபருடைய வேலையாள் .

அன்று மாலையே ( புதன்கிழமை ) டெல்லி போலீஸை சேர்ந்த இரண்டு இன்ஸ்பெக்டர்கள் பம்பாயிற்கு விமானத்தில் விரைந்தனர்.

கான்பூரில்,நாதுராம் ரயில்வே நிலைய அலுவலகத்திற்குச் சென்று,ரெயில் நிலைய தங்கும் அறையில்,இரண்டு படுக்கைகள் கொண்ட அறையை தன் பெயரிலேயே புக் செய்தார்.

அன்றைய நாளை அவர்கள் ரெயில் நிலையத்திலேயே கழித்தனர்.

அடுத்த நாள் காலை 11.30 மணிக்கு லக்னோ-ஜான்ஸி மெயிலை பிடித்து,ஜான்ஸிக்கு சென்று அங்கு,பம்பாயிற்கு செல்லும் டெல்லி-பம்பாய் இணைப்பு ரயிலை பிடித்தனர்.

ஜனவரி மாதம் 23ந் தேதி நண்பகலில் ,விக்டோரியா டெர்மினஸ் சென்றடைந்தனர்.

அங்கிருந்து,SANDHURST சாலையில் அமைந்திருந்த ‘ ஆர்ய பதிகாஸ்ரம் ‘ ஹோட்டலுக்கு சென்றனர்.

இது ஒரு மலிவான ஹோட்டல்.இந்த ஹோட்டலில் ஆப்தே பலமுறை மனோரமா சால்வேயுடன் தங்கியிருக்கிறார்.

இந்த ஹோட்டலின் மேலாளர் கயா பெர்ஷத் துபேயிற்கு ஆப்தே அடிக்கடி வரும் ஒரு முக்கிய கஸ்டமர்.

பல படுக்கைகள் கொண்ட அறையாகயிருந்தாலும்,முழு அறைக்கும் வாடகை கொடுத்து அதில் தங்குவது ஆப்தேயின் வழக்கம்.

ஆனால் இம்முறை ஹோட்டல் மேனேஜரால் ஆப்தேயிற்கு தனி அறை கொடுத்து உதவமுடியவில்லை.

வேறு ஆறு பேருடன் அன்றைய பொழுதை கழிக்கவேண்டியதாயிற்று.அடுத்த நாள் காலையில் தனி அறை தருவதாக மேனேஜர் வாக்களித்திருந்தார்.

ஆப்தேயும்,நாதுராமும் தங்கள் லக்கேஜை ஹோட்டலில் வைத்துவிட்டு,தானேயிலிருந்த ஜி.எம்.ஜோஷி அவர்களின் இல்லத்திற்கு விரைந்தனர்.

கார்கரே பம்பாயிற்கு வந்தால் சாதாரணமாக அங்குதான் தங்குவது வழக்கம்.

கார்கரே டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றபிறகு அவரைப்பற்றி பற்றி தனக்கு எந்த விவரமும் தெரியாது என ஜி.எம்.ஜோஷிஅவர்களிடம் தெரிவித்தார்.

கார்கரே சாதாரணமாகச் செல்லக்கூடிய வேறு இரண்டு மூன்று இடங்களுக்குச் சென்று பார்த்தனர்.

காந்தியை கொல்வதற்கான ‘ புதிய திட்டம் ‘ நாதுராம் மட்டுமே செயல்படுத்தப் போவது என்ற நிலையில்,அவர்கள் கார்கரேயை தேடியது சற்று விநோதமாக இருந்தது.

மதன்லால் பஹ்வாவின் கைதிற்கு பிறகு,மற்றவர்களுடன் தொடர்பு இல்லாததால்,அவர்கள் வெளியே இருக்கிறார்களா அல்லது கைது செய்யப்பட்டு விட்டார்களா என்று ஆப்தேயிற்கும் நாதுராமிற்கும் தெரியவில்லை.

அவர்களும் கூட பம்பாயில் தங்கியிருப்பதா அல்லது பூனாவிற்கு திரும்பிச்செல்வதா என்பதை முடிவுசெய்ய முடியாத நிலையில் இருந்தார்கள்.

அதனால்,அவர்கள் கார்கரேயை தேடிச்சென்ற இடங்களில் ,கார்கரே வந்தால் கூறும்படி எந்த தகவலையும் கொடுக்கவில்லை.

மாலையில் பூனாவிற்கு ஒரு நண்பரை அனுப்பி கோபால் கோட்ஸேயிடம்,தாங்கள் பம்பாயில் இருக்கும் விவரத்தை தெரிவிக்கச் சென்னார்கள்.மனோரமா சால்வேயை தொடர்புகொண்டால் தாங்கள் தங்கியிருக்கும் இடம் தெரியுமென்றும் கூறி அனுப்பினார்கள்.

தாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு வெகுநேரம் கழித்தே திரும்பினார்கள்.

அடுத்த நாள் காலையில் ஹோட்டல் மேனேஜர் ஒரு டபுள் ரூம் இருப்பதாக தெரிவித்தார்.ஆப்தேயும் அதை ஏற்றுக்கொண்டார்.

அதன்பிறகு அவர்கள் அருகாமையில் CARNAC சாலையில் அமைந்திருந்த ELPHINSTONE ANNEXE ஹோட்டலுக்குச் சென்று ஒரு அறையை வாடகைக்கு எடுத்தனர்.

ஹோட்டல் ரிஜிஸ்டரில் ‘ N.VINAYAKRAO AND FRIEND ‘ என்று நாதுராம் பதிவிட்டார்.

பின்னாளில் ஆர்ய பதிகாஸ்ரமத்தின் மேனேஜர் அளித்த வாக்குமூலத்தில்,

‘’ அன்று நண்பகல் சுமாருக்கு ஆப்தே ஒரு பெண்மணியோடு திரும்பி வந்தார்.அந்த பெண்மணி ஜனவரி 24ந் தேதி பகல்முழுவதும்,24,25 தேதிகளுக்கிடையேயான இரவிலும் அங்கு தங்கியிருந்தார்’’.

ஜனவரி 25ந் தேதி ஞாயிற்றுகிழமையன்று காலையில் ஹோட்டல் அறையை காலிசெய்துவிட்டு,ELPHINSTONE ANNEXEல் எடுத்திருந்த இன்னொரு அறைக்கு சென்றனர்.

மனோரமா சால்வியும் ஆப்தேயுடன் சென்றார். அடுத்த இரண்டு நாட்களின் பெரும்பகுதியை அவர் ஆப்தேயுடன் கழித்தார்.

நாதுராம் அவர்கள் இருவரையும் தனியே விட்டுவிட்டு,திரைப்படங்கள் பார்ப்பது,வேறு இடங்களுக்குச் செல்வது என்று பொழுதை கழித்தார்.

( தொடரும் )

  • எழுத்து: யா.சு.கண்ணன்

- Advertisement -
- Donate via PayTM -
Tamil Dhinasari News..! We are in the path of protecting our Hindu dharma! Please consider supporting us to run this Tamil web portal continuously.
-Advertisement-

சினிமா:

-Advertisement-
-Advertisement-
- Advertisement -

You might also likeRELATED
Recommended to you

%d bloggers like this: