நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் இயக்குநர் பாலா ஆஜராகிவிட்டு வெளியே வந்தபோது வழக்கறிஞர்கள் பலரும் போட்டி போட்டுக்கொண்டு இயக்குநர் பாலாவுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.
அவன் இவன் படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குனர் பாலா அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜராக குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி அப்படத்தின் இயக்குனர் பாலா இன்று அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜரானார். அதனால் அவர் மீதான பிடிவாரன்ட் ரத்து செய்யப்பட்டது.
பின்னர் வெளியே வந்த பாலாவுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர் வழக்கறிஞர்கள். அதற்காக ஒரு தள்ளுமுள்ளு நடந்ததுதான் ஆச்சரியம்.




