அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் இந்திய விமானபடையிடம் ஒப்படைப்பு!

இந்தியா சற்றுமுன்
apppatchi

இந்தியா ஆர்டர் செய்திருந்த அதிநவீன ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் படைத்த அப்பாச்சி, சினூக் ரக ஹெலிகாப்டர்கள் அனைத்தையும் அமெரிக்காவின் போயிங் நிறுவனம் இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்து விட்டதாக அறிவித்துள்ளது.

இந்தியா தனது விமானப்படையை மேலும் வலிமைப்படுத்தி நவீனமயமாக்க, அமெரிக்க தயாரிப்பான Apache ஏஹெச்-64 மற்றும் CH-47F(I) (Chinook heavy-lift) ரக ஹெலிகாப்டர்களை வாங்க முடிவு செய்தது. இதன்படி Apache ரகத்தில் 22 மற்றும் 15 Chinook ஹெலிகாப்டர்களையும் வாங்க கடந்த 2015 ஆம் ஆண்டு Boeing நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

இந்த ஹெலிகாப்டர்கள் லேசர் மற்றும் Infrared தொழில்நுட்பத்தில் இயங்கக் கூடியது. அதோடு இரவு – பகல் என எந்த நேரத்திலும், எந்தவித கால நிலையில் வலிமையுடன் செயல்படும் விதத்தில் இந்த ஹெலிகாப்டர்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அதிநவீன ஆயுதங்களை சுமந்து செல்லக் கூடிய திறன் படைத்தவை.

முன்னதாக கடந்த மார்ச் மாதத்தில் கடைசி 5 Chinook ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படை வசம் ஒப்படைக்கப்பட்டிருந்த் நிலையில் தற்போது மீதமிருந்த 5 Apache ஹெலிகாப்டர்கள் இந்திய விமானப்படையிடம் கடந்த மாதம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த கடைசி 5 புது ஹெலிகாப்டர்களும் மூலம் இந்தியா ஆர்டர் செய்திருந்த 37 ஹெலிகாப்டர்களும் முழுமையாக இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பாச்சி ஹெலிகாப்டர்களை வைத்துள்ள 17 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக மாறியுள்ளது. மேலும் இந்தியா வாங்கியிருக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்களானது மிகவும் நவீன ரகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள போயிங் இந்தியாவின் நிர்வாக இயக்குநர் சுரேந்திர அஹுஜா, இந்திய பாதுகாப்புத்துறையின் நவீனமயமாக்கல் மற்றும் பணி தயார்நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு போயிங் செயல்பட்டிருப்பதாக கூறினார்.

இந்திய விமானப்படையில் MI 35 என்ற ரஷ்ய ஹெலிகாப்டர்கள் பல ஆண்டுகளாக இருந்து வந்தன. இப்போது அமெரிக்காவின் ஏஹெச் -64 இ மற்றும் CH-47F(I) அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் வந்துள்ளதால் உலகின் அதிநவீன விமானங்களை கொண்ட விமானப்படைகளில் ஒன்றாக இந்திய விமானப்படை மாறியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.