அமிதாப், அபிஷேக் பச்சனை தொடர்ந்து… ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு!

இந்தியா சற்றுமுன் சினி நியூஸ் லைஃப் ஸ்டைல்
aiswarya bacchan
aiswarya bacchan

பாலிவுட் திரையுலக சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சனுக்கும் அவரது மகன் அபிஷேக் பச்சனுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து இன்று காலை மும்பை நானாவதி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமிதாப்பச்சனுக்கு லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. அவரது உடல் நிலை சீராக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து அமிதாப் பச்சன் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த படி ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டார். மேலும், பத்து நாட்கள் முன்பிருந்து தன் தொடர்புடைய அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

இதை அடுத்து, அவர்கள் குணமடைந்து திரும்ப வேண்டும் என அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வேண்டிக் கொண்டிருந்தனர். நடிகர் ரஜினி காந்த் அமிதாப்பச்சனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவரது உடல்நிலை குறித்து விசாரித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய டுவிட்டர் பதிவில், அமிதாப் பச்சனும் அவரது மகனான அபிஷேக் பச்சனும் கொரோனாவில் இருந்து விரைவில் மீண்டு வர வேண்டும். நான் இந்திய மருத்துவர்களை நம்புகிறேன். இருவரும் உடல் நல பிரச்சினைகளை கடந்து விடுவார்கள் என தெரிவித்திருந்தார்

aiswarya bacchan
aiswarya bacchan

இதனிடையே நேற்று, நடிகர் அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கும் கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பரிசோதனையின் முடிவுகள் இன்று தெரியும் என்று மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கும் அவர்களது மகள் ஆரத்யாவுக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனை மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சர் இன்று உறுதிப்படுத்தினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.