தேவை 4 டி சூத்திரம்: கொரோனாவை வெல்ல ஆளுநர் தமிழிசை அளித்த ‘டிப்ஸ்’!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
tamilisai soundarrajan
tamilisai soundarrajan
  • நிச்சயம் 4டி சூத்திரம் கடைபிடியுங்கள்… தெலங்காணா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்.
  • ஞாயிறன்று கரோனா பரிசோதனைகள் தனக்கு நெகட்டிவாக வந்தது என்று கவர்னர் தமிழிசை வெளியிட்டார்.
  • மக்கள் அனைவரும் நிச்சயம் 4டி என்ற சூத்திரத்தை கடைபிடிக்கவேண்டும் என்று குறிப்பிட்டார்.

தெலங்காணாவில் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நேரத்தில் மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் முக்கியமான கருத்துக்களை கூறியுள்ளார்.

சனிக்கிழமை ஆளுனர் கூட கரோனா பரிசோதனை செய்து கொண்டார். ஞாயிறன்று வந்த ரிப்போர்ட்டில் அவருக்கு நெகட்டிவ் என்று தெளிவானது.

ஆனால் சில ராஜ்பவன் ஊழியர்களுக்கு பாசிட்டிவ் என்று வந்துள்ளது. இந்த செய்தியை கவர்னர் ட்விட்டர் மூலம் வெளியிட்டு மக்களை முன்ஜாக்கிரதையாக பரிசோதனைகள் செய்து கொண்டு கரோனா நோயிலிருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இன்று நான் கரோனா டெஸ்ட் செய்து கொண்ட ரிசல்ட் வந்தது. நெகட்டிவாக வந்துள்ளது. ரெட் ஜோனில் உள்ளவர்கள், கரோனா பாதித்தவர்களை சந்தித்தவர்கள் தயவுசெய்து முடிந்தவரை விரைவாக கரோனா பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

முன்னெச்சரிக்கையாக பரிசோதனை செய்து கொள்வதால் நம்மை நாம் காப்பாற்றிக் கொள்ள முடியும். அதுமட்டுமின்றி அடுத்தவரையும் காப்பாற்றமுடியும். இதற்காக சிறிதும் பின் வாங்காதீர்கள். நீங்கள் பரிசோதனை செய்துகொண்டு அருகில் இருப்பவருக்கும் உற்சாகப்படுத்துங்கள் .

முக்கியமாக 4 டி என்ற சூத்திரத்தை கடைபிடியுங்கள். 4டி என்றால் டெஸ்ட், ட்ரேஸ் (வைரஸ் பரவியவர்களை அடையாளம் காண்பது), ட்ரீட் (சிகிச்சை), டீச் (அடுத்தவருக்கு டெஸ்ட் செய்து கொள்ளும்படி உற்சாகப்படுத்துவது) என்று கவர்னர் தமிழிசை ட்விட்டரில் குறிப்பிட்டார்.

மாநிலத்தில் கொரோனா நிலைமை பற்றி மாநில கவர்னர் பேச்சுவார்த்தை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே. நிம்ஸ் மருத்துவமனையோடு கூட இன்னும் சில மருத்துவமனைகளிலும் நோயாளிகளையும் மருத்துவர்களையும் சந்தித்துப் பேசினார். பிரைவேட் மருத்துவமனை பிரதிநிதிகளுடன் உரையாடினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.