நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் மார்ச் 9 முதல் வேலைநிறுத்தம்

சற்றுமுன்

chennai-port சென்னை: நாடு முழுவதும் துறைமுகத் தொழிலாளர்கள் சுமார் 50 ஆயிரம் பேர் மார்ச் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். நாடு முழுவதும் உள்ள 12 பெரும் துறைமுகங்களில், எண்ணூர் தவிர உள்ள மற்ற 11 பெரும் துறைமுகங்களும், இந்திய பெரும் துறைமுகச் சட்டம் 1963-ன் கீழ் துறைமுக பொறுப்புக் கழகங்களாக செயல்பட்டு வருகின்றன. பெரும் துறைமுகங்களை இந்திய கம்பெனிகள் சட்டம் 1956-ன் கீழ் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அவ்வாறு செய்வதால் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என்றும், துறைமுகத் தொழிலாளர்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகள் ஏற்படும் என்றும் துறைமுக தொழிலாளர்களின் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில், தங்களது எதிர்ப்பைக் காட்டும் விதமாக, மார்ச் 9-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்துக்கு தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அந்தந்த துறைமுக நிர்வாகங்களிடம் நேற்று முறைப்படி இதற்கான வேலைநிறுத்த நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.