கொரோனா: தமிழகத்தில் இன்றைய பாதிப்பு 4526; உயிரிழப்பு 67..!

சற்றுமுன் சென்னை மதுரை லைஃப் ஸ்டைல்
corona virus
corona virus
  • தமிழகத்தில் மேலும் 4,526 பேருக்கு கொரானா பாதிப்பு.
  • சென்னையில் மட்டும் 1078 பேர் பாதிப்பு.
  • தமிழகத்தில் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 4743 பேர்.
  • தமிழகத்தில் மேலும் 67 பேர் கொரானாவுக்கு பலி.
  • இதுவரை கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,47,324 பேர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 4,526 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,324ஆக உயர்ந்துள்ளது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா  உயிரிழப்புஎண்ணிக்கை 2,099ஆக   அதிகரித்து உள்ளது

சென்னையில் மட்டும் இன்று 1078 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது . சென்னையில் தொடர்ந்து 13ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 79662ஆக உயர்வு கண்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் இன்று 4,743 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடுகளுக்குத் திரும்பி உள்ளனர் இதை எடுத்து  தமிழகத்தில் குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ஆக அதிகரித்துள்ளது. 

தற்போது சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் ஏற்பட்டு வருகிறது சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 3448 பேருக்கு கொரோனா  பாதிப்பு உறுதி செய்ய பட்டுள்ளது .

மதுரையில் அதிகபட்சமாக 450 பேருக்கு சரவணா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

மாவட்ட வாரியாக இன்றைய கொரோனா தொற்று பாதிப்பு விவரம்

covid3
covid3

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.