நெல்லை அருகே காரில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல்! மூவர் கைது!

உள்ளூர் செய்திகள் கிரைம் நியூஸ் நெல்லை
katathal

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி புறவழிச் சாலையில் காரில் வந்த நபர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஐந்து தோட்டாக்கள் மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்த காவலர்கள் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பைபாஸ் புறவழிச்சாலையில் காவல் உதவி ஆய்வாளர் இசக்கிராஜா தலைமையிலான காவலர்கள் வியாழக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வந்த சந்தேகப்படும்படியான காரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததையடுத்து காவலர்கள் காரை சோதனையிட்டதில் காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஒரு பிஸ்டல் 5 தோட்டோக்கள், அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, காரில் வந்த திருநெல்வேலி மாநகர பகுதிகளைச் சேர்ந்த ராஜ்குமார் வினோத்குமார் சுரேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் இவர்கள் காரில் ஈரோட்டில் இருந்து நெல்லைக்கு செல்வதாகவும், ராஜ்குமார் மீது 3 கொலை வழக்குகள், வினோத் குமார் மீது 2 கொலை வழக்குகள், சுரேந்திரன் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட 10 வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் கலை கதிரவன், ஆய்வாளர் இன்ஸ்பெக்டர் சுதேசன் ஆகியோர் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.