ஸ்ரீவி. ஆண்டாள் கோயில் ஆடிப்பூர திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஆன்மிகச் செய்திகள் சற்றுமுன் மதுரை
adipoora-kodiyetram
adipoora-kodiyetram
  • ஆண்டாள் கோவில் ஆடிப்பூரம் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…
  • நுழைவு வாசலில் நின்று வணங்கிய பக்தர்கள்…..

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மிகவும் புகழ் பெற்றது.

தினம் தோறும் இந்தக் கோவிலில் விழாக்கள் நடைபெற்று வந்தாலும், பிரசித்தி பெற்ற ஆடித் தேரோட்டம் விழா மிகமுக்கியமானது. இந்த ஆண்டு தேரோட்டம் நடைபெறுமா என்று பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் கோவில்கள் மூடப்பட்டிருக்கிறது. அனைத்து கோவில்களிலும் அன்றாட பூஜைகள் மட்டும், பக்தர்களுக்கு அனுமதியில்லாமல் அர்ச்சகர்களால் செய்யப்பட்டு வருகிறது.

இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், ஆண்டாள் கோவில் ஆடிப்பூரத் திருவிழாவை பக்தர்களை கோவிலுக்குள் அனுமதிக்காமல், விழாவை நடத்த அனுமதி வழங்கினர். இன்று காலை ஆடிப்பூரத் தேரோட்ட விழாவிற்கான கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.

கொடியேற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோவில் வாசலில் கூட்டமாக கூடியிருந்தனர். ஆனாலும் கோவிலில் பணிபுரியும் அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள் மட்டும் கொடியேற்ற நிகழ்ச்சிக்காக கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

கோவிலுக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால், பக்தர்கள் ஆண்டாள் கோவில் நுழைவு வாசலில் நின்று சுவாமியை வணங்கிச் சென்றனர்.

கொடியேற்ற நிகழ்வுகள் அனைத்தும் யூடியூப் மூலம் பக்தர்கள் காண்பதற்கான ஏற்பாடுகள் செய்திருப்பதாக அறநிலையத்துறை அதிகாரிகள் கூறினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.