இரவில் தொல்லைக் கொடுத்த பைக் காரர்கள்! போலீஸூக்கு போன் போட்ட ஜெயா பட்சன்!

சினி நியூஸ் சினிமா
c85fa92687e6f5c6169f6d421bc23a0f - 2026

அதிக இரைச்சலுடன் பைக்குகள் ஒன்று அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பைக் ரேஸ் செய்பவர்களால் தூக்கம் பாதிக்கப்படுவதாக அமிதாப்பச்சன் மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்

மும்பையின் ஜூகு பகுதியில் உள்ள ஜல்சா பங்களாவில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பங்களாவிற்கு அருகே சில தினங்களுக்கு முன், இரவு சுமார் 11.30 மணியளவில், அதிக இரைச்சலுடன் பைக்குகள் ஒன்று அங்குமிங்கும் சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பைக் இரைச்சல் காதை அடைத்ததால் எரிச்சலடைந்த அமிதாப்பச்சனின் மனைவி ஜெயா பச்சன் உடனடியாக காவல் கட்டுப்பாடு அறைக்கு தொலைபேசி மூலம் புகார் தெரிவித்தார்.

 
இதையடுத்து காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து, ஜூகு காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்ற நேரத்தில், புகாருக்கு உள்ளான வாகன ஓட்டிகள் அங்கு இல்லை

எனினும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் பைக்கின் பதிவு எண்ணை கண்டுபிடித்து, இதனை அடிப்படையாக வைத்து அந்த பைக்கை ஓட்டி வந்தவரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் இரவு நேரத்தில் காலியாக இருக்கும் தெருக்களை பயன்படுத்தி பைக் ரேஸில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்

 

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.