வேலைக்கு சென்ற 42 வயது பெண்..! 2 சகோதரர் உட்பட 4 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை!

இந்தியா கிரைம் நியூஸ்
vankodumai

வேலைக்கு சென்ற 42 வயது பெண்ணை 2 சகோதரர்கள் உட்பட 4 பேருடன் கத்தி முனையில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் பிவாண்டியில் 42 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இரண்டு சகோதரர்கள் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி இரவு பவர்லூம் நகரத்தின் சார்னிபாடா பகுதியில் அமைந்துள்ள கோடவுன் ஒன்றில் பெண் வேலை தேடிச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

“அங்குள்ள ரயில்வே தடங்களுக்கு அருகே இருந்து கடத்தப்பட்டு, அருகிலுள்ள புதர்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு கத்தியை வைத்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். மயக்க நிலையில் கிடந்த பெண்ணை பார்த்த வழிப்போக்கர்கள் நர்போலி பகுதி போலீசிடம் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 42 வயது பெண்ணின் சகோதரர்கள் மோன்டி வர்தே மற்றும் விஷால் வர்தே, மற்றும் குமார் ரத்தோட் மற்றும் அனில் ஷியாம் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சகோதரர்களே இப்படி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.