கொரோனா; தமிழகத்தில் முதல் முறையாக… 100ஐக் கடந்த உயிரிழப்புகள்!

சற்றுமுன் சென்னை தமிழகம்
corona - 2026

சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் முதல் முறையாக நூறைக் கடந்துள்ளது உயிரிழப்புகளின் எண்ணிக்கை. அது போல், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 லட்சத்து 63-ஆயிரத்தை கடந்தது.

தமிழகத்தில் மேலும் 5,609 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,63,222 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 109 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,241 ஆக அதிகரித்துள்ளது.

மாவட்ட வாரியாக கொரோனா தொற்று குறித்த விவரம்..

district wise corona detail in aug 03 - 2026

https://stopcorona.tn.gov.in/wp-content/uploads/2020/03/Media-Bulletin-03-08-20-COVID-19-6-PM.pdf

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.