ஜாக்கிங் சென்ற பெண் ஆராய்ச்சியாளர் கொலை!

உலகம் கிரைம் நியூஸ்
sushmidha sen - 2026

அமெரிக்காவில் ஜாக்கிங் சென்ற, இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஆராய்ச்சியாளர் கொலை செய்யப்பட்டார்.

டெக்சாஸ் மாகாணத்தின் ப்ளானோ நகரில் வசிப்பவர் ஷர்மிஸ்தா சென்(43). அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். உயிரியல் தொடர்பான படிப்பில் ஆராய்ச்சி செய்து வரும் அவர், புற்றுநோயாளிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.

கடந்த 1ம் தேதி பூங்கா ஒன்றின் அருகே கடுமையாக தாக்கப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அதேநேரத்தில், அவரது வீட்டிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக 29 வயது மதிக்கத்தக்க பகரி அபியோனா மொன்கிரீப் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தடகள வீராங்கனையான, ஷர்மிஸ்தா சென், இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பூங்கா பகுதியில் தினமும் ஜாக்கங் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.