பாகிஸ்தானின் கார்ட்டூன் ஆசை: ராஜ்நாத் சிங் கிண்டல்

அடடே... அப்படியா? இந்தியா உலகம் சற்றுமுன்
IMG 20190928 WA0009 - 2026
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குறித்து வெளியிடப்பட்ட கருத்துரு சர்ச்சைக்குள்ளான நிலையில், பாகிஸ்தான் ஊடகம் (The Nation) மன்னிப்பு கோரியது.

காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் அனைத்தும் இந்தியாவிற்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், உலக அரங்கில் பாகிஸ்தான் ஆதரவு தேடி வருவது கார்டூன் வரைபவர்களுக்கு விஷயம் தருவதற்கு மட்டும் பயன்படும் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டல் செய்துள்ளார்.

நீருக்கு அடியில் சென்று எதிரிகளின் இலக்கை தாக்குவதற்காக கல்வாரி நீர்மூழ்கிக் கப்பல் நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டு 3 நாட்களே ஆகும் நிலையில், ஐஎன்எஸ் கந்தாரி நீர்மூழ்கிக் கப்பல் இன்று நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவர் கடற்படையினரிடையே உரையாற்றினார். அப்போது அவர், நமது அரசின் செயல்பாடுகளை பாகிஸ்தான் இப்போது புரிந்து கொண்டிருக்கும்.

15 July12 Rajnath singh - 2026

ஐஎன்எஸ் கந்தாரி போன்ற கப்பலால் கூடுதல், அதிநவீன திறன்களால் மபெரிய பதிலடி கொடுக்கும் திறன் நம்மிடம் உள்ளது.

ஐஎன்எஸ் காந்தாரி நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. கந்தாரி என்பது ஆழ்கடலில் வேட்டையாடும் மீன் வகையை சேர்ந்தது.

காஷ்மீரில் நாம் மேற்கொண்டு வரும் வளர்ச்சி பணிகளுக்கு உலக நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.

ஆனால் தனக்கு ஆதரவு தேடி பாகிஸ்தான் வீடு வீடாக கதவை தட்டிக் கொண்டிருக்கிறது. கார்டூன் வரைபவர்களுக்கு விஷயம் தருவதற்காக மட்டுமே பாகிஸ்தானின் இந்த செயல் பயன்படும் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.