“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”
(கவலைப்படாதே.உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.-தம்பதிகளுக்கு ஆறுதல்கூறி பேர் வைக்கச்சொன்ன-பெரியவா)
(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்!
+ அகச் சுவையும் இருக்கும்) இரண்டு சம்பவங்கள் இன்றைய போஸ்டில்.)
சொன்னவர்; ஓர் அணுக்கத் தொண்டர்.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.
முப்பத்தைந்து வயதைத் தாண்டாத தம்பதிகள். முகத்தில் சோகம் அப்பிக்கொண்டிருந்தது.
பெரியவாளுக்கு வந்தனம் செய்தார்கள்.
“ஒரே பிள்ளை…..போ..யி..டுத்து…”
இருவரும் கூட்டாக அழுதார்கள்.அழுகை ஓர் ஆறுதல்.சிறிது நேரத்திற்குப் பின் அழுகை நின்றது.
“இந்தப் பிரபஞ்சத்திலே எதுவும் நம்முடையது இல்லே. பணம் – சொத்து, பிள்ளை – குட்டி,அண்ணன் – தம்பி எதுவுமே சொந்தம் இல்லே .கவலைப்படாதே. உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான். மண்ணாங்கட்டி என்று பெயர் வை….”
அருகிலிருந்தவர்களுக்கு இதைக் கேட்டதும், வாய்விட்டு சிரிக்க வேண்டும் போலிருந்தது.
(ஆனால் சிரிக்கவில்லை)கொசுறு செய்தி.ஓர் ஆண்டுக்குப் பிறகு அந்தத் தம்பதிகள் மண்ணாங்கட்டியுடன் தரிசனத்துக்கு வந்தார்கள் …………………………………………………………………………………..
சம்பவம்-2
…………………………………………………………………………………….
மரத்தாலான சிறு குடம்,டம்ளர், உத்தரிணி,தட்டு, கிண்ணங்கள் கொண்டுவந்து சமர்ப்பித்தார் ஒரு பக்தர்.
பெரியவாள் ஒவ்வொன்றாகக் கையிலெடுத்து ஆசையுடன் தடவிக் கொடுத்தார்கள். பின்னர், குறும்புச் சிரிப்புடன் சொன்னார்கள்.
“இங்கே (ஸ்ரீமடத்தில்) தான் மரப்பாத்திரங்களுக்கு மதிப்பு; குடுமிக்கு மதிப்பு; சந்த்யாவந்தனம் செய்பவர்களுக்கு மதிப்பு…!
“இதை நகைச்சுவை போலச் சொன்னார்களே தவிர,இது லைட்டான விஷயம் அல்ல .பெரியவாளின் அகச் சுவை



