உறவினர் நான்கு பேரை கத்தியால் குத்தி கொலை!

இந்தியா கிரைம் நியூஸ்
loose - 2026

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் தனது உறவினர் நான்கு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

காசர்கோடு மாவட்டம் மஞ்சேஸ்வர பகுதியில் உள்ள பைவாலிகே கிராமத்தில் 35 வயதான மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவர் இடப்பிரச்சனையில் தனது உறவினர்கள் நான்கு பேரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

அருகில் இருந்தவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவரைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகின்றது என கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.