சொக்கி போவாங்க செய்யுங்க தக்காளி பஜ்ஜி!

Published:

tomato bajji - 2026

தக்காளி பஜ்ஜி

தேவையானவை:

அதிகம் பழுக்காத நாட்டுத் தக்காளி – 5
(கனத்த வில்லைகளாக நறுக்கவும்),
பொட்டுக்கடலைமாவு – 50 கிராம்,
சோள மாவு – 25 கிராம்,
மைதா மாவு – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் விழுது – அரை டீஸ்பூன், பெருங்காயத் தூள் – சிறிதளவு,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை, எண்ணெய் பொரிக்க – தேவையான அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

பொட்டுக்கடலை மாவு, சோள மாவு, மைதா மாவு, உப்பு, சமையல் சோடா, மிளகாய் விழுது, பெருங்காயத்தூள் ஆகியவற்றை ஒன்று சேர்த்து, நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். தக்காளி வில்லைகளை மாவில் தோய்த்து சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

குறிப்பு: தக்காளியில் இருக்கும் நீர் எண்ணெயில் சலசலப்பு உண்டாக்கும் என்பதால், மிதமான தீயில் மெதுவாக பொரித்தெடுக்கவும்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

Related articles

Recent articles

spot_img