ரூ.20 ஆயிரம் இழப்பீடு பெற… ரூ.2 ஆயிரம் லஞ்சம்; ஆர்.ஐ., கைது!

bribe 1
bribe 1

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய அதிரடி வேட்டையில் 2,000 ரூபாய் லஞ்சம் வாங்கிய சமூக நல பாதுகாப்பு திட்ட அலுவலக ஆர் ஐ கையும் களவுமாக பிடிபட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் இறந்து போன சோமு என்பவர் உழவர் பாதுகாப்பு அட்டை வைத்திருந்தார். அவருடைய இறப்பிற்கு தமிழக அரசால் வழங்கப்படும் 20 ஆயிரம் ரூபாயை பெற சமூக பாதுகாப்பு திட்ட அலுவலக வட்டாட்சியரிடம் விண்ணப்பித்து பெறவேண்டும்.

இதற்காக சோமுவின் மனைவி சேது மற்றும் சோமுவின் தம்பி மகன் தனசேகரன் ஆகியோர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் அலுவலகத்தில் உழவர் அட்டையின் நகலையும் இணைத்து சோமுவின் இறப்பிற்கு அரசு வழங்கும் 20 ஆயிரம் ரூபாய் உதவியை பெற விண்ணப்பித்துள்ளார்.

விண்ணப்பத்தை பெற்ற அலுவலக ஆர் ஐ ஈஸ்வரன் என்பவர் அந்த மனுவை வட்டாட்சியருக்கு அனுப்பி 20,000 ரூபாய் அரசு வழங்கும் நிதியை பெற தனக்கு 2000 ரூபாய் லஞ்சமாக தர வேண்டும் என்று கேட்டு பல நாட்களாக அவர்களை அலைய வைத்துள்ளார்.

இதுபற்றி தகவல் கிடைக்கப் பெற்றவுடன் ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை கண்காணிப்பாளர் உன்னி கிருஷ்ணன் தலைமையில் போலீசார், ஆர் ஐ ஈஸ்வரன் இறந்து போன சோமுவின் உறவினர் தனசேகர் என்பவரிடம் 2,000 ரூபாய் லஞ்சம் பெறும்போது கையும் களவுமாகப் பிடித்து கைது செய்துள்ளனர்.

ALSO READ:  தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் லஞ்ச ஒழிப்பு போலீசார் இதுபற்றி கூறும்போது… ஏழை விவசாயி சோமுவின் இழப்பிற்கு அவர் விவசாயி என்ற அடிப்படையில் அரசு வழங்கும் 20000 ரூபாய் உதவி தொகையை பெற மனு செய்த சோமுவின் உறவினர்களிடம் லஞ்சம் தந்தால் மட்டுமே நடவடிக்கை எடுப்பதாகவும் உயர் அதிகாரிகளுக்கு மனுவை அனுப்பி வைப்பதாகவும், இல்லையெனில் உதவித் தொகை பெற இயலாது என்றும் கூறி அலைக்கழித்து உள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத தனசேகரன் லஞ்ச ஒழிப்பு காவல்துறை கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து லஞ்சம் பெறும் போது ஈஸ்வரனை கையும் களவுமாக கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இவர், அண்மையில்தான் டிஎன்பிஎஸ்சி மூலம் நேரடியாக நியமனம் பெற்றவர் என்று தெரிகிறது. மிகவும் இளம் வயது உடைய ஒருவர், ரூ.2000 லஞ்சத்திற்கு தன்னையே அழித்துக் கொண்டார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை
ALSO READ:  விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories