அரிசிமாவில் ஸ்ரீராமஜெயம் எழுதி கோலமும் போட்டு அசத்திய நிதி அமைச்சர்!

இந்தியா சற்றுமுன் பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
kolam - 2026

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பூமி பூஜை இன்று நடைபெற்ற நிலையில் டெல்லியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வீட்டில் உள்ள சிறிய கோயிலில் அரிசி மாவினால் ஸ்ரீராமஜெயம் என எழுதி கோலமிட்டிருந்தார்.

ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் வெள்ளியிலாலான 40 கிலோ செங்கல்லை நட்டு விழாவை தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. முதலில் அனுமன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்திய மோடி, பின்னர் அயோத்திக்கு வந்தடைந்தார்.

கொரோனா பரவல் காரணமாக குறைந்த எண்ணிக்கையிலான நபர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டனர். மற்றபடி நாடு முழுவதும் உள்ள ராமர் பக்தர்கள் தங்கள் பகுதிகளில் ராமர் படங்களை நிறுவி அதற்கு பூஜைகளை செய்தனர்.

அது போல் பல்வேறு இடங்களில் வீடுகளில் அரிசி மாவை கொண்டு கோலங்கள் போடப்பட்டிருந்தன. இதனால் அயோத்தி மட்டும் அல்ல இந்தியாவே விழாக் கோலம் பூண்டிருந்தது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தனது வீட்டில் போடப்பட்ட ரங்கோலியை புகைப்படம் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பொதுவாக பல வீடுகளில் அன்றாடம் அரைக்கப்படும் அரிசி மாவினை கொண்டு ரங்கோலியோ அல்லது கோலமோ போடப்படும். இன்று எங்கள் வீட்டில் உள்ள சிறிய கோயிலில் அரிசி மாவில் கோலம் போட்டுள்ளோம் என கூறிய நிர்மலா சீதாராமன், அதில் ஸ்ரீராமஜெயம் என எழுதியிருந்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.