ஊடக அனுபவத்தால்… நண்பர்களை ஒன்றிணைத்து படத்தை தயாரிக்கும் இயக்குனர்!

Published:

productionnumber - 2026

அணி கிரியேஷன்ஸ் சார்பில் நியூட்டன் பிரபு என்ற புதுமுக இயக்குனர் தயாரித்து இயக்கும் படம் “ப்ரொடக்ஷன் நம்பர் ஒன்”!

பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை இன்று காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள  சாய்பாபா கோவிலில் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக ஜாக்குவார் தங்கம் , ரோபோ ஷங்கர், எழுமின் விஜி ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

இப்படம் சைக்கோ திரில்லர் வகை சார்ந்தது இதில் நாயகனாக கலைஞர் டிவி தொகுப்பாளர் தணிகையும்,  நாயகியாக அறிமுக நடிகை குயின்ஸ்லியும் நடிக்கின்றனர்.

வில்லனாக விஜய் டிவி புகழ் பாண்டி கமல் நடிக் கிறார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்திலும் சிறப்பு தோற்றத்திலும் பிரபல நடிகர்கள் நடிக்க உள்ளார்கள்.

இப்படத்தின் இயக்குனர், இதற்கு முன்பாக பல படங்களுக்கு துணை மற்றும் இணை பணியாற்றியுள்ளார். குறும் படங்களை இயக்கி உள்ளார். பிரபல பத்திரிகை நிறுவனத்தில் பல வருடங்களாக சவுண்ட் இன்ஜினியர் ஆக பணியாற்றியுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு; பக்தியும் பாதுகாப்பும்!

இயக்குனரின் ஊடக அனுபவத்தை கொண்டும் இதனால் ஏற்பட்ட நட்பு வளையத்தை வைத்தும்  நண்பர்களை ஒன்றிணைத்து   இப்படத்தை தயாரிக்கிறார். முழுக்க முழுக்க ரொமான்டிக் சைக்கோ த்ரில்லர் வகையை சேர்ந்த படம் என்கிறார் இயக்குனர்.

இப்படத்திற்கு சம்சத் ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார். சித்தார்த்தா பிரதீப்   இசை அமைக்க உள்ளார்.  இவர்  மலையாள  திரையுலகில் இருந்து தமிழுக்கு வருகிறார்!

Related articles

Recent articles

spot_img