தமிழகத்தில் இன்று… 5175 பேருக்கு கொரோனா; 112 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை
corona - 2026

தமிழகத்தில் இன்று, 5175 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,73,460ஆக உயர்ந்துள்ளது.  தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 112 பேர்  உயிரிழந்தனர். இதை அடுத்து, தமிழகத்தில் இது வரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,461ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரம்,  இன்று 6,031 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதை அடுத்து, தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 2,14,815 ஆக அதிகரித்துள்ளது. 

சென்னையில் இன்று 1044 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டது. இதை அடுத்து, சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,05,004ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 61,166 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.  இதுவரை தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 28,45,406 பேருக்கு மேற்கொள்ளப் பட்டுள்ளது. 

சென்னையைக் காட்டிலும் மற்ற மாவட்டங்களில் பாதிப்பு அதிகம் பதிவாகியுள்ளது. சென்னை நீங்கலாக மற்ற மாவட்டங்களில் 4131 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! 

  • சென்னை- 1044
  • செங்கல்பட்டு- 487
  • திருவள்ளூர்- 472
  • காஞ்சிபுரம்- 342
  • விருதுநகர்- 67
  • ராணிப்பேட்டை- 143
  • தேனி- 278
  • வேலூர் -179
  • கடலூர்-170
  • குமரி -175
  • தூத்துக்குடி-173
  • சேலம்-159
  • புதுக்கோட்டை- 150
  • திருச்சி-136
  • தென்காசி- 121
  • கோவை – 112
  • தி.மலை – 112
  • மதுரை -106
  • தஞ்சை- 79
  • விழுப்புரம் -77
  • திண்டுக்கல்-71
  • சிவகங்கை- 69
  • நாகை- 52
  • கரூர்-50
  • ஈரோடு – 40
  • நீலகிரி – 36
  • அரியலூர்- 36
  • ராமநாதபுரம்- 32
  • நாமக்கல்- 31
  • திருப்பூர்- 27
  • நெல்லை- 26
  • திருவாரூர்- 21
  • பெரம்பலூர் -20
  • க.குறிச்சி- 18
  • தர்மபுரி – 17
  • கிருஷ்ணகிரி- 13
  • திருப்பத்தூர்-12

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.