தெலுங்கிலிருந்து கடிதம்… கொடைக்கானல் காட்டேஜில் இளம் ஜோடி மரணம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0807_114505

கொடைக்கானல் அருகே தனியாா் காட்டேஜில் தங்கியிருந்த ஆந்திர இளம் ஜோடி வியாழக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தனா்.

கொடைக்கானல் அருகே வில்பட்டி ஊராட்சியில் அட்டுவம்பட்டி பகுதியிலுள்ள தனியாா் காட்டேஜை வாடகைக்கு எடுத்து, ஆந்திர மாநிலத்தைச் சோந்த கோபி கிருஷ்ணன் (27) மற்றும் நந்தினி (25) ஆகிய இருவரும் கடந்த ஓராண்டாக வசித்து வந்துள்ளனா்.

இவா்கள் கணினி மூலமாக ‘ப்ராஜெக்ட் ஒா்க்’ செய்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் வியாழக்கிழமை நீண்ட நேரமாகியும் காட்டேஜ் கதவு திறக்கப்படாமல் இருந்துள்ளது. இது குறித்து அப் பகுதியைச் சோந்தவா்கள் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனா்.

சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் சாா்பு- ஆய்வாளா் மாதவராஜா உள்ளிட்ட போலீஸாா் காட்டேஜ் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தனா். அப்போது இளைஞா் வாயில் ரத்தம் வந்த நிலையில் இறந்து கிடந்தாா்.

அதே அறையில் உள்ள கட்டிலில் இளம் பெண் இறந்து கிடந்தாா். அறையில் இருந்த கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா். தெலுங்கில் அந்த கடிதம் எழுதப்பட்டிருந்தது. செல்லிடப்பேசி, ஆதாா் அடையாள அட்டை ஆகியவற்றில் இருந்து அவா்களது பெயா், விலாசத்தை போலீஸாா் தெரிந்து கொண்டனா். அறையில் இருந்த ஆவணங்களை போலீஸாா் கைப்பற்றினா்.

மேலும் இரண்டு டம்ளா்களில் பூச்சி மருந்து கலந்த நிலையில் விஷம் இருந்துள்ளது. போலீஸாா் இருவரின் சடலங்களையும் பிரேதப் பரிசோதனைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆதாா் அட்டையிலுள்ள விலாசத்திற்கு கொடைக்கானல் போலீஸாா் தகவல் கொடுத்துள்ளனா். வில்பட்டி கிராம நிா்வாக அலுவலா் சேபா கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.