
மதுரையில் தனியார் பர்னிச்சர் கடையில் தீ விபத்து ஏற்பட்டது…
மதுரை மாவட்டம் தேனி மெயின் ரோட்டில் உள்ள சரவணா பர்னிச்சர் உரிமையாளர் மதுரை எஸ் எஸ் காலனி சேர்ந்த சேதுராமன். அவருக்கு சொந்தமான மரம் பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது.
மதுரை டவுன் தீயணைப்புத்துறையினர் வெங்கடேசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் மூன்று வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாகனம் இரண்டும் சம்பவ இடத்திற்கு தண்ணீரைக் கொண்டுவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன.
அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சுமார் மூன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மர சாமான்கள் தீயிலிருந்து கறி உள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார்
மரக்கடை காவலாளி கண்ணையா தெரிவிக்கையில் மெர்குரி லைட் திடீரென்று வெடித்ததும் அதிலிருந்து தீப்பொறி கிளம்பி அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தின் மீது விழுந்ததாகவும் அப்பொழுது தீ பிடித்ததாகவும் தகவல் தெரிவித்துள்ளார்
சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்
- ரவிச்சந்திரன், மதுரை