
தேச துரோக செயலுக்கு துணை போகாதீர்கள்! கம்யூனிஸ்ட்களே!
மலப்புரம் மாவட்ட இஸ்லாமியர்களுக்கு ரமலான் பரிசு கொடுப்பதற்காக ‘குரான்’ அடங்கிய பொருட்களை ஐக்கிய அரபு அமீரக தூதரகம் கேட்டு கொண்டதன் பேரில் 28 பொட்டலங்களை கல்வி அமைச்சகம் மூலம் அனுப்பியதாக கேரள மாநில உயர் கல்வி அமைச்சர் ஜலீல் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு வருடமும் ரமலான் போது ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து உலகின் பல இடங்களில் உள்ள மசூதிகளை ரமலான் பரிசு பொருட்கள் மற்றும் குரானை அனுப்புவது வழக்கம். அது போலவே கேரளாவில் உள்ள மசூதிகளுக்கு அனுப்பியது என்றும், ஊரடங்கு உத்தரவினால் அவைகளை உரிய மசூதிகளுக்கு கொண்டு சேர்க்க அவர்களால் முடியவில்லை என்றும், அதனால் தன் அமைச்சக வாகனங்களில் கொண்டு செல்ல உத்தரவிட்டதாகவும் அமைச்சர் ஜலீல் கூறுகிறார்.
மத சார்பற்ற அரசின் பிரதமர் ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் எப்படி பங்கேற்கலாம் என கேள்வி எழுப்பிய கம்யூனிஸ்டுகள், குரானை அரசு வாகனங்களில் ஏற்றி விநியோகம் செய்வதில் தவறில்லை என சொல்லும் கேரள அமைச்சரை கண்டிப்பார்களா?
இதற்கிடையில் தாங்கள் குரான் புத்தகங்களை கேரளாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு அனுப்பவில்லை என்று ஐக்கிய அரபு அமீரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படியானால் கேரள அரசின் அமைச்சர் மலப்புரம் மாவட்டத்திற்கு அரசு வாகனத்தில் அனுப்பியது என்ன?
தங்க கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஸ்வப்னா சுரேஷுடன் அமைச்சர் ஜலீல் பல முறை அலைபேசியில் பேசியதற்கான உறுதி செய்துள்ளது புலனாய்வு நிறுவனம். அவர்கள் இருவருக்கும் உள்ள தொடர்பு என்ன? ஒரு அமைச்சர் தங்க கடத்தலில் ஈடுபட்டுள்ள குற்றவாளியோடு பேசியதன் மர்மம் என்ன?
குரானை கொண்டு சென்றதாக சொல்லி தங்கம் கடத்துவதில் உடந்தையாக இருந்தாரா அமைச்சர்? தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் அலுவலகத்தின் தொடர்பு குறித்த அதிர்ச்சி நிலவும் நேரத்தில், அந்த மாநிலத்தின் அமைச்சர் மதத்தின் பெயரால் இந்த தங்க கடத்தலுக்கு துணை சென்றதாக விமர்சிக்கப்படுவது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பு : அமைச்சர் ஜலீல் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான சிமி(SIMI) யின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நாராயணன் திருப்பதி