பொன்.மாணிக்கவேலுக்கு சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் பொறுப்பு!

உள்ளூர் செய்திகள் சற்றுமுன் தமிழகம்

 

சென்னை:

ரயில்வே ஐ.ஜி., பொன். மாணிக்கவேலிடம் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் பொறுப்பு ஒதுக்கப்பட்டுள்ளது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.,யாக இருந்த பொன். மாணிக்கவேல், ரயில்வே ஐ.ஜி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், சிலைக் கடத்தல் வழக்குகளை பொன். மாணிக்கவேல்தான் விசாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், சிலைத் திருட்டு புகார்களை விசாரிக்க ஐ.பி.எஸ்., அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையில் குழு அமைத்தும், இந்த வழக்குகளை, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றவும் உத்தரவிட்டது.

இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து அவருக்கு பாராட்டு தெரிவித்தது. இந்நிலையில், உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி, பொன். மாணிக்கவேலுக்கு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது.

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி., யாக இருந்த தமிழ்சந்திரன், திருச்சி ஆயுதப்படை ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.