கனிமொழி வென்ற தொகுதியில்… பாஜக.,வில் இணைந்த திமுக.,வினர் 50 பேர்!

சற்றுமுன் நெல்லை லைஃப் ஸ்டைல்
thuthukkudi-bjp-joining
thuthukkudi-bjp-joining

கனிமொழி வென்ற தூத்துக்குடி தொகுதியில், திமுக., வைச் சேர்ந்த இளைஞரணி துணைத்தலைவர் உள்பட 50 பேர் அக்கட்சியில் இருந்து விலகி, பாஜக.,வில் இணைந்தனர்.

தொடர்ந்து திமுக இந்துக்களை இழிவு படுத்தி வரும் நிலையில், திமுக.,வில் உள்ள உணர்வுள்ள இந்துக்கள் பெரிதும் மன வேதனை அடைந்து வருகின்றனர். இனியும் திமுக.,வில் இருந்தால், தாங்கள் கோயிலுக்குச் சென்று வரும் தன்மானமுள்ள இந்துவாக இருக்க முடியாது என்று வெளிப்படையாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

thuthukkudi-bjp
thuthukkudi-bjp

இதனை வெளிக்காட்டும் விதமாக தூத்துக்குடி மாவட்ட திமுக.,வில் உள்ள மானம் மரியாதை உள்ள ஆன்மிக இந்துக்கள் தங்கள் உணர்வுகளை மதிக்காத கட்சித் தலைமையைக் கண்டித்து, அக்கட்சியைப் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

மாறி வரும் சூழல்களால், திமுக.,வின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த அக்கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இருந்து விலகி மாவட்ட தலைவர் பி.எம். பால்ராஜ் முன்னிலையில் தங்களை பாஜக.,வில் இணைத்துக் கொண்டனர்…!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.