சிறுவனுக்கு ஆபாச படம் காட்டி பாலியல் தொந்தரவு! ஆசிரியர் கைது!

உலகம் கிரைம் நியூஸ் சற்றுமுன்
cell 2 - 2026

உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே பாரா பகுதியில் ஒரு 10 வயது மாணவன் தினமும் டியூசன் படிக்க செல்வான். தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் அச்சிறுவனை பெற்றோர்கள் தவறாமல் டியூசன் அனுப்பிவந்தனர்.

ஆனால் பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர் நாட்கள் செல்ல செல்ல சிறுவனுக்கு பாலியல் உணர்வுகளை தூண்டியுள்ளார். அதன்படி தனது செல்போனில் ஆபாச படங்களை காட்டியுள்ளார்.

அதோடு சிறுவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
பொறுக்க முடியாமல் ஒருநாள் வீட்டிற்கு சென்ற சிறுவன் ஆசிரியரின் ஆபாச படம் உள்ளிட்ட சேட்டைகளை பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், போலீசாரிடம் ஆசிரியர் குறித்து புகார் அளித்தனர். இதனையடுத்து ஆசிரியரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்திய போலீசார், அவரது ஆராய்ந்தபோது, அதற்குள் நிறைய ஆபாசப்படங்கள் டவுன்லோடு செய்யப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர் .

இதனையடுத்து ஆசிரியரை பாலியல் வழக்கில் கைது செய்த போலீசார் வேறு யாருக்கும் இதுபோன்று தொல்லை அளித்துள்ளாரா என விசாரித்து வருகின்றனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.