காங்கிரஸ் அல்லாத பிரதமராக நெடு நாள்கள்! சாதித்த மோடி!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
pm modi - 2026

பிரதமர் மோடியின் அரியதான ரெக்கார்டுகள்.

பிரதம மந்திரி நரேந்திர மோடி மற்றும் ஒரு அரிதான ரெக்கார்டுக்கு சொந்தம் ஆகியுள்ளார்.

இந்தியாவை மிக அதிக காலம் பதவியிலிருந்து ஆண்ட காங்கிரசைத் தவிர பிற கட்சி பிரதமராக முன்னிலையில் உள்ளார்.

சென்ற காலத்தில் இந்த ரெக்கார்டு முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் மீது இருந்தது. புதிதாக பிரதமர் மோடி அதனை முறியடித்துள்ளார்.

அதேபோல் அதிக காலம் பதவியில் இருந்த நான்காவது பிரதமர் கூட மோடியே. இந்த விஷயத்தை பிரசார் பாரதி பிரிவு ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளது.

மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் 2268 நாட்கள் பதவியில் இருந்தார். வியாழக்கிழமை யோடு பிரதமர் மோடி அதனை முறியடித்துள்ளார்.

நரேந்திர மோடி நாட்டின் 14 வது பிரதமராக மே மாதம் 26ம் தேதி 2014ல் பதவி ஸ்வீகாரம் செய்தார். இரண்டாவது முறை பிரதமராக மே மாதம் 30ம் தேதி 2019 ல் பிரதமராக பதவிப் பொறுப்பை ஏற்றார்.

நாட்டினை மிக அதிக காலம் ஆண்ட பிரதமர்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் உள்ளார்கள். அவர்களில் முதலாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தார். அவருடைய மகள் இந்திரா காந்தி 11 ஆண்டுகள் மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 ஆண்டுகள் பிரதமர் பதவியில் இருந்தார் கள்.

தற்போதைய ரெக்கார்டுகளோடு கூட பிரதமர் மோடி அண்மையில் மற்றுமொரு ரெக்கார்டுக்குக் கூட சொந்தமாகி உள்ளார்.

அயோத்தி ராமஜென்ம பூமியை தரிசித்து கொண்ட முதல் பிரதமராக நரேந்திர மோடி ரெக்கார்டில் உள்ளார்.

மோடியை விட முன்பாக பிரதமர் பதவியில் இந்திரா, ராஜீவ், வாஜ்பேயி இருந்தாலும் பிரதமர் ஹோதாவில் அயோத்தியில் பயணித்த போது கூட ராமஜென்ம பூமியை விட்டு தூரமாக இருந்தார்கள்.

ஆகஸ்ட் 5ம் தேதி ராமஜென்ம பூமியின் பூமி பூஜையை முன்னிட்டு பிரதமர் மோடி பிரதமர் ஹோதாவில் ராமஜென்ம பூமியை தரிசித்து ரிக்கார்ட்
ஏற்படுத்தி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.